உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக....

Thursday, September 9, 2010

ஆலோசனை எப்படி சொல்லனும்....

விமானநிலையத்தில் ஒருவர் புகைபிடித்து கொண்டு இருந்தார்..அவரை நோக்கி ஒருவர் வந்து ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் குடிப்பிர்கள் என்று கேட்டதற்கு அந்த நபர் ஏன் கேட்கிறிர்கள் என்று கேட்டார்.

அதற்கு கேள்வி கேட்ட நபர் "சிகரெட் பிடிப்பதற்கு பதிலாக அதற்கு செலவழித்த காசை சேமித்து இருந்தால், ஒருவேளை நிங்கள் போக கூடிய விமானம் உங்களுடையதாக இருக்கலாம்" என்று கூறினார்

Sunday, August 29, 2010

கார் பார்க்கிங்

கார் பார்க்கிங் - மின்னெஞ்சலில் கார் பார்க்கிங் அன்டர்கிரவுன்ட் என்ற தலைப்பை பார்த்தவுடன் கார் பார்க்கிங் பிரச்சனை உள்ள இடத்தில் கட்டப்பட்டதாக இருக்கும் என்று பார்த்தால் இது தனிப்பட்ட நபரின் வீட்டில் கட்டப்பட்டதாக உள்ளது.

Monday, August 23, 2010

ஏன் இப்படி.....நம்முடைய தேவைகளுக்காவும்,நன்றி செலுத்துவதற்காகவும் இறைவனை வேண்டுவது ஏன்பது ஏற்றுக்கொள்ள கூடிய விசயம்.ஆனால் தங்கதளது தேவை நிறைவேற்ற கோரி மற்றும் நன்றி செலுத்தும் விதமாக இப்படி தங்களை வருந்தி கொள்வது எந்த விதத்திஒலும் ஏற்றுக் கொள்ள முடியாது.மின்னெஞ்சலில் வந்த இப்புகைப்படம் நமக்கு இந்த பக்தரின் வேண்டுதலின் கடுமை காட்டுகிறது


Sunday, August 22, 2010

'மரங்களை வெட்டுங்கள்'

'மரங்களை வெட்டுங்கள்'


உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

Wednesday, August 4, 2010

அமெரிக்காவுடன் போர் வந்தால்........


ஒரு வேளை அமெரிக்காவுடன் போர் வந்தால் இந்தியா அதை எதிர்கொள்ள சக்தி இருக்கிறாதா... நிச்சயம் இருக்கிறது என்பதை நகைச்சுவையுடன் ஒன்லி பார் தமிழ் யாகூ குழுமத்திலிருந்து வந்த மெயில்


இது அமெரிக்காவிடம் இருக்கும் சக்திஇவனி அனைத்துயும் சமாளிக்கும் விதத்தில்

இந்தியாவிடம் இருக்கும் பிரமாண்ட சக்தி


சும்மா சிரிக்கபுடாது.அவரது சாகச காட்சியை பார்த்துட்டு முடிவுய் பன்னுங்க.....Enhanced by Zemanta

Thursday, July 29, 2010

கிளிக்கு இப்போ வேலை தேவை

சமிபத்தில் நடைப்பெற்ற உலக கால்பந்து போட்டி எந்த அளவு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்ததுதோ அதே அளவுக்கு ஜெர்மன் பால் ஆக்டோபஸ்  எந்த அணி வெற்றி பெறும் என்ற தனது கணிப்பின் முலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது. (தோல்வியடைந்த நாட்டு ரசிகர்கள் அதன் மீது கடுப்பில் இருந்தது வேற விசயம்)


Wednesday, July 28, 2010

எக்ஸெல் - ASAP UTILITIES

எக்ஸெல் UTILITY சம்பந்தமாக இணையத்தில் தேடிய போது இத்தளம் கிடைக்க பெற்றது.மிகவும் பயனுள்ள தளம்..இத்தளத்திற்கு சென்று பதிவிரக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Saturday, July 24, 2010

தட்டச்சு படங்கள்

தங்களது கற்பனை திறன் முலம் படைப்பாளிகள் தங்களது திறமை வெளி கொண்டு வருகின்றர்.இந்த படங்கள் தட்டச்சு இயந்திரம் முலம் வரைந்த படங்களாகும்.Tuesday, July 20, 2010

இரு சக்கர வாகனம்


வித விதமான இரு சக்கர வாகணங்கள் சாலைகளில் சர்வ சாதரணமாக பார்க்கலாம்.ஒரு காலத்தில் இரு சக்கர வாகனம் வாங்குவது என்பது எளிதானது அல்ல.அதற்கு பதிவு செய்து காத்து இருக்க வேண்டும்.ஆனால் இப்பொழுது நினைத்த நேரத்தில் வாங்கி விடலாம்.

கடன் கொடுக்கவும் நிறுவனங்கள் தயாராக இருப்பதால் எல்லா தரப்பும் மக்களும் வாங்க கூடிய நிலையை இருக்கிறது.இப்போ எதற்கு ஏன் இந்த பில்டப் என்று கேட்கிறிங்களா....

Sunday, July 18, 2010

மனிதனின் திறனுக்கு எது எல்லை?மன்னை’ மாதவன்


இயந்திரங்கள் இயங்கும் திறனை (HORSE POWER) குதிரைதிறன் என்று கணக்கிடப் படுகிறது. அந்த இயந்திரத்தை வடிவமைத்து இயக்கும் மனிதனின் திறனை எப்படி கணக் கிடுவது? மனிதனின் திறனுக்கு எது எல்லை? அளவிட முடியாத மனிதனின் திறனுக்கு வானமே எல்லை. எத்தனையோ திறன்கள் மனி தனுக்குள் புதைந்திருந்தாலும் தலை முறைகளைக் கடந்து மனிதனை அடையாளம் காட்டும் மிக முக்கியத் திறன் அவனது கற்பனைத் திறன். ஆங்கிலத்தில் கிரியேட்டிவிட்டி (Creativity) என்றும் மற்றும் படைப்பாற்றல் என்றும் பல பெயர்கள் இதற்கு உண்டு. படைப் பாற்றல் என்பது திரைப்படப் பாடல் ஆசிரியர்கள், இயக்குனர்கள் சார்ந்தது என்ற கருத்து பரவ லாக நிலவிவருகிறது.

Thursday, July 15, 2010

என் கவலைதான் மிகப்பெரியது

சகோதரர் ரொஷன் அவர்கள் கூகுள் குழுமத்திலிருந்து அனுப்பி இருந்த மெயில் நமக்கு ஒரு படிப்பினை தருவதாக இருக்கிறது.அதனால் பகிர்ந்து கொள்ள விரும்பி இங்கு தருகிறேன்

சில விஷயங்கள் உங்களைப் பாதிப்பதாகவும் கவலையளிப்பதாகவும் உள்ளதா??

Wednesday, July 14, 2010

இனிப்பான செய்தி

இனிப்பான செய்தி

டயபடீஸ் நோய்க்கு அடிக்கடி இன்சுலின் ஊசி போட்டு துன்பப்படுபவரா நீங்க?


விரைவில் உங்களுக்கென அற்புத மாத்திரை வருகிறது. 6 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும், ஆண்டுக்கணக்கில் டயபடீசை மறக்கலாம்.

Tuesday, July 13, 2010

இணையத்தில் அரட்டை


இணையத்தில் தெர்ந்தவர்களுடன் சாட்டிங் செய்வதில் காட்டிலும்,முகம் தெரியாதவர்களுடன் சாட்டிங் செய்வது தான் அதிகமாக இருக்கிறது.அதிலும் தங்களுடைய உண்மையான விவரங்களை மறைத்து எதிர்பாலினத்துடன் சாட்டிங் செய்வது பிரபலமாக இருக்கிறது..இந்த செய்திக்கு இந்த படம் போதும் என்று நினைக்கிறென்

Monday, July 12, 2010

ஐடி நகைச்சுவை

மின்னெஞ்சலில் வந்த ஐடி சம்பந்தமான நகைச்சுவை துணுக்கு.Monday, July 5, 2010

Team Work

டீம் வொர்க் இதன் அர்த்தம் நமக்கும் புரியும்.நேர்காணலில் கூட இது சம்பந்தமாக கேள்வி கேட்கப்படும்.ஆனால் மெயில் வந்த இந்த் புகைப்படம் உண்மையான அர்த்ததை சொல்கிறது போலிருக்கு.


படத்தை பெரிதாக பார்க்க்க அதன் மீது கிளிக் செய்யவும்

Thursday, July 1, 2010

நேரத்தை நிர்வகிப்பது எப்படி?

சுகுமார் ஏகலைவ்

நம் எல்லாருக்கும் சரிசமமாக ஆண்டவனால் அளந்து கொடுக்கப்பட்ட ஒரு நாள் ரேஷன் 24 மணி நேரம்.
நேற்று என்பது செல்லாத காசோலை.நாளை என்பது பிராமிசரி நோட்டு.இன்று என்பதே கையிலுள்ள ரொக்கப் பணம்.எனவே, இன்றைய நேரத்தை எப்படிச் செலவழிக்கின்றோம் என்பதே முக்கியமான கேள்வி.

1. நேரத்தை திட்டமிடுங்கள் (Time Scheduling)

ஒவ்வொரு நாளும் காலை எழுந்தது முதல் உறங்கச் செல்லும் வரை ஒவ்வொரு 30 நிமிடத் தையும் செயல்வாரியாக, அட்டவணைப் படுத்துங்கள். உங்கள் செயல்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

அ. பயனுள்ளவை
ஆ. அன்றாடச் செயல்கள்
இ. பயனில்லாதவை

உங்கள் 24 மணி நேரத்தில் எத்தனை மணிகள் பயனில்லாதவையாக செலவழிக்கப் பட்டிருக்கின்றது என்பதை கண்கூடாக அறிய முடியும். அவற்றைக் குறைத்து பயனுள்ள நேரத்தை அதிகப்படுத்துங்கள். அன்றாடச் செயல்களிலும் தேவையான அளவு நேரத்தை மட்டுமே உபயோகப்படுத்துங்கள். இவ்வாறு பயனுள்ள நேரத்தை அதிகப்படுத்தினால் நீங்கள் ஒரு சிறந்த மனிதனாக மாறி வருகிறீர்கள் என்பது உறுதியாகிறது.

2. நேரத்தை வீணடிக்கும் நிகழ்ச்சிகள்
(Time Wasters)

நேரத்தை வீணடிக்கும் செயல்களுக்கு இரண்டு காரணங்கள் : நீங்கள் மற்றும் மற்றவர்கள்

அ. நீங்கள் காரணமாக இருக்கும் விஷயங்கள்
1. ஒத்திப்போடுதல் (Procrastination)
2. போதுமான விவரங்கள், தெளிவு இல்லாமை
3. மற்றவர்கள் மேல் பழி கூறுதல்

ஆ. மற்றவர்கள் காரணமாக இருக்கும் விஷயங்கள்
1. அன்றாட அலுவல்களில் மற்றவர்களுக்காக தேவைக்கதிகமான நேரம் செலவழித்தல்.

2. விருந்தினர், சுகமின்மை, மின் தடங்கள், மற்றும் பல.
3. பிறர் செய்யும் தவறுகள்
4. சூழ்நிலை

உகந்த நேரம் (Preferential / Prime Time)

ஒவ்வொருவருக்கும் காலை முதல் இரவு வரை ஏதாவது ஒரு குறிப்பிட்ட நேரம் உற்சாகமும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். அந்த வேளையில் மூளையும் சிறப்பாகச் செயல்படும். சிலருக்கு அதிகாலையாக இருக்கலாம். சிலருக்குப் பின்னிரவாக இருக்கலாம். உங்களுக்கு உகந்த நேரத்தில் கடினமான, முக்கியமான விஷயங்களைச் செய்தால் அது சிறப்புப் பெறும்.

காலந்தவறாமை (Punctuality)

கால தாமதம் நமது நேரத்தை மட்டுமின்றி, மற்றவர்களுடைய நேரத்தையும் வீணடிக்கிறது. சிறிது முன்கூட்டியே திட்டமிட்டுத் தயார் நிலையில் இருந்தால். காலதாமதம் ஏற்படாது. மேற்கத்திய நாடுகளில் காலதாமதம் ஒரு மன்னிக்க முடியாத குற்றமாக, கேவலமாகக் கருதப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் காலந் தவறாமையின் மகத்துவம் இன்னும் பலருக்குப் புரியவில்லை என்பது தான் வேதனை. காலந் தவறாமை ஒரு தலைவருக்குள்ள தகுதிகளில் முக்கியமானது.
நேரத்தை நிர்வகித்தல் (அன்றாட வேலைகள் தவிர)
உங்கள் வேலைகளை 4 வகையாகப் பிரியுங்கள்.

1. செய்தே ஆக வேண்டிய வேலை (Got to do)
இன்றேசெய்ய வேண்டிய முக்கி வேலைகள் – அவசரம்

2 செய் வேண்டிய வேலை (Need to do)
அடுத்த சில நாட்களில் முடிக்க வேண்டிய வேலைகள் – முக்கியம்
ஆனால் அவசரமில்லை.
3. செய்ய விரும்பும் வேலை (Like to do)
உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய வேலைகள் – முக்கியமும் இல்லை – அவசரமும் இல்லை.

4. செய்யக்கூடாத வேலைகள் (Not to do)

வேண்டாத குப்பைகளை, பேப்பர்களை, சேகரித்தல், தேவையற்றநீண்ட நெடிய உரை யாடல்கள், வாக்குவாதங்கள், சிந்தனைகள்.

நேரத்தை பயன்படுத்த சில குறிப்புகள்

1. ஆங்கில அகராதியில் ஓரிரு வார்த்தைகளை யாவது சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்.
2. 15 அல்லது 30 நிமிடம் மனதிற்குப் பிடித்த நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும்.
3. மறுநாளைக்கு தேவையானவற்றை தயார் படுத்த வேண்டும்.
4. தினமும் நாட்குறிப்பில் மணிவாரியாக உங்கள் செயல்களைப் பதிவு செய்யுங்கள்.
5. இன்றைய வேலையை இன்றே செய்யுங்கள். நாளைய வேலையையும் இன்றே செய்யுங்கள். ஆனால், ஒருபோதும் இன்றைய வேலையை நாளை செய்யாதீர்கள்.
6. கடினமாக உழைக்க வேண்டும் என்பதில்லை; திட்டமிட்டு, அழகாக, கவனமாக, உரிய நேரத் தில் உரிய வேலையை உளமாரச் செய்தால் போதும்
வெற்றி உங்கள் வீடு தேடி வந்து வாழ்த்தும்.

நேரத்தை – திட்டமிடுங்கள்! – பயன்படுத்துங்கள்! – கடைப்பிடியுங்கள்!


சுகுமார் ஏகலைவ்

Thanks Thannambikai

Tuesday, June 29, 2010

கண்ணீர் வரவழைக்கும் ஒரு தன்னம்பிக்கை வீடியோ..
நன்றி கேஆர்பி.செந்தில்

ஆங்கிலத்தில் சம்பிரதாய கடிதங்கள் இனி எளிதாக எழுதலாம்

பள்ளி முதல் கல்லூரிவரை , அலுவலகங்கள் முதல் சொந்தபந்தங்கள்
வரை அனைவருக்கும் ஆங்கிலத்தில் சம்பிரதாயமான கடிதம் இனி
எளிதாக எழுதலாம் எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.

தமிழ் கடிதம் எழுத சொன்னால் உடனடியாக எழுதும் நம் தமிழ் நண்பர்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுத கூறினால் சற்று யோசித்து
எழுதுகின்றனர்.அலுவலகத்துக்கோ, கல்லூரிக்கோ அல்லது அரசுக்கோ கடிதம் எழுத கூறினால் அவர்கள் கூறும் முதல் வார்த்தை எங்களுக்கு அனுபவம் இல்லை என்று, அனுபவம் இருந்தாலும் ஆங்கிலத்தில் எழுதினால் இலக்கண பிழை ஏற்படுமோ என்ற பயம் உள்ளது.

ஆங்கிலத்தில் இனி எந்த கடிதம் வேண்டுமானாலும் எழுதலாம் நமக்கு
உதவுவதற்க்காகவே ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.readwritethink.org/files/resources/
interactives/letter_generator//இந்த தளத்திற்க்கு சென்று நம் பெயரைக் கொடுத்து எளிதாக எந்த
கடிதம் வேண்டுமானாலும் உருவாக்கலாம். சம்பிரதாய கடிதங்கள் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருக்க நமக்கு ஒவ்வொரு டியையும்
கையைப்பிடித்து அழைத்துச்செல்கிறது. எந்த இடத்தில் எதற்க்காக என்ன
பெயர் கொடுக்க வேண்டும் என்றும் அலுவலகத்தில் சம்பள உயர்வு
வேண்டும் என்றால் எப்படி கடிதம் எழுத வேண்டும் யாருக்கு எந்த
பதிவியில் இருப்பவர்களுக்கு எழுதவேண்டும், எதை மையப்படுத்தி
நாம் கேட்க வேண்டுவதை ஆங்கிலத்தில் எப்படி எல்லாம் எளிய
முறையில் இலக்கண பிழை இல்லாமல் எழுதலாம் போன்ற அத்தனை
தகவல்களையும் கொண்டு நம்மை ஆங்கிலத்தில் சம்பிரதாய கடிதங்கள்
எழுத உதவுகிறது. பார்ப்பதற்க்கு எளிதாக எந்த விளம்பரமும் இல்லாமல்
தெரிகிறது. கண்டிப்பாக இந்த இணையதளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்

நன்றி விண்மணி

சகோதரர் அலாவுதீன் என்பவர் மின்னெஞ்சலில் அனுப்பியது

Video of BP Oil Blaze, Rig sinking into Gulf of Mexico

Video of BP Oil Blaze, Rig sinking into Gulf of Mexico

Tuesday, June 22, 2010

இல்லற வாழ்வில் இணையும் முன்னர்

இல்லற வாழ்வில் இணையும் முன்னர்எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனது வாழ்வினதும் திருப்புமுனையாக அமையும் நிகழ்வாகும். திருமணம்தான் சமூகக் கட்டுக்கோப்பினதும், சமூக உணர்வினதும் அடிப்படையாகும். இந்தத் திருமணம் எனும் வாழ்வின் திருப்புமுனை அம்சம் சர்வ சாதாரணமான தற்காலிக உணர்வுகளுக்குத் தீனியாக மட்டும் சிலரால் நோக்கப்படுகின்றது. இது தவறாகும். இந்த ஆக்கத்தில் திருமணக் கனவில் மிதக்கும் மணப் பெண்களுக்கான சில வழிகாட்டல்களை வழங்க விரும்புகின்றோம்.1. கற்பனையை விட்டு விட்டுக் கையேந்துங்கள்!

திருமண வயதை எட்டிய எல்லாப் பெண்களுக்கும் தனது எதிர்காலக் கணவன் பற்றிய ஆசைகளும், கனவுகளும், கற்பனைகளும் இருப்பது இயல்புதான். வீட்டில கல்யாணப் பேச்சு அடிபடும் போதே அவள் கனவுகளில் மிதக்க ஆரம்பிக்கின்றாள். கணவனது உடல் அமைப்பு, உருவ அமைப்பு, உடை-நடை-பாவனை, பேச்சு என அனைத்தையும் பற்றிக் கற்பனை பண்ணி, தானே தனக்கென ஒரு கற்பனைக் கணவனைப் படைத்து வைத்துக்கொள்கிறாள். திருமணத்தின் பின்னர் தனது கணவன் தனது எதிர்பார்ப்புகளுக்கும், எண்ணங்களுக்கும் மாற்றமாக இருக்கும் போது ஏமாற்ற உணர்வையும், வாழ்வின் இலக்கை அடையாத உணர்வையும் பெறுகின்றாள். எனவே திருமணக் கனவில் மிதக்கும் கன்னியரே! உங்கள் கற்பனையைக் களையுங்கள். ஒரு ஸாலிஹான கணவனை வேண்டி ஐவேளைத் தொழுகையிலும், தஹஜ்ஜத் வேலையிலும் அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்.(குடும்பத்தையும், சமய-சமூகக் கட்டுப்பாடுகளையும் மீறித் தாமே தமக்குரிய கணவனைத் தேடிக் கொண்டு ஓடிச் செல்லும் பெண்கள் பற்றியோ, சினிமாக் கதாநாயகர்களைக் கற்பணைக் கணவர்களாக நினைத்துக் கொண்டுள்ள பெண்களைப் பற்றியோ இங்கு நாம் குறிப்பிடவில்லை என்பதைக் கவனத்திற்கொள்க!)2. வலியின் துணையுடன் வாழ்க்கைத் துணையை அடையுங்கள்!

ஆண்கள்தான் பெண் பார்க்க வேண்டும். மணப்பெண்ணைத் தேட வேண்டும், இதுதான் முறை. அதற்கு மாற்றமாகப் பெண்ணே தனக்கென வாழ்க்கைத் துணையைத் தேடும் நிலை நீங்க வேண்டும். பெண்களுக்கான வாழ்க்கைத் துணையை அவர்களது ‘வலீ’ எனும் பொருப்பாளர்கள் தேடுவதில் குற்றமோ, குறையோ கிடையாது. ஒரு தந்தை அல்லது சகோதரன் தனது மகளை அல்லது சகோதரியை மணம் முடித்துக் கொள்வீர்களா? என மார்க்க ஈடுபாடுடைய ஒருவரிடம் கேட்பது குறை அல்ல. அல்லது ஒரு பெண்ணின் தந்தையிடமோ அல்லது சகோதரனிடமோ உங்கள் மகளை அல்லது சகோதரியை எனக்கு மணமுடித்துத் தருவீர்களா? என்று கேட்பதும் குற்றமில்லை. உமர்(ரலி) அவர்களது மகள் ஹப்ஸா(ரலி) அவர்களது கணவன் மரணித்ததன் பின்னர் தனது மகளை மணமுடித்துக் கொள்வீர்களா? என உமர்(ரலி) அவர்கள் உஸ்மான்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அவர்கள் அப்போது மணமுடிக்கும் எண்ணம் இல்லை என்றதும், அவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்களிடமும் கேட்டார்கள்.பெண்ணின் கண்ணியமும், கற்பும் காக்கப்படவும் அவளது வாழ்வுக்கு உத்தரவாதம் கிடைக்கவும் சமூகக் கட்டுக்கோப்புக் களையாமல் இருக்கவும் ஒரு பெண் தனக்குரிய வாழ்க்கைத் துணையைத் தானே தேடிச் செல்லாமல் ‘வலீ’ எனும் தனது பொருப்பாளரின் துணையுடன் வாழ்க்கைத் துணையைத் தேடிச் செல்வது அவசியமாகும்.3. தகவல் அறிந்து, தரம் அறிந்து தாரமாகுங்கள்!!

உங்களைப் பெண் கேட்டு வந்தவரது உடை-உடல்-தோற்றத்தை மட்டும் பார்க்காது, அவர் பற்றிய முழுத் தகவல்களையும் பெற்று நிதானமாக முடிவு செய்யுங்கள்! உங்களைப் பெண் பார்த்தவரின் தொழில் என்ன என்று அறிந்து கொள்ளுங்கள்! மூட்டை சுமப்பதென்றால் கூட ஹலாலான உழைப்பு என்றால் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. ஆனால் ஹறாமான உழைப்பாக இருந்தால் நீங்களும், உங்களது குழந்தைகளும் ஹறாத்தை உண்டு, ஹறாத்தை அணிந்து, ஹறாத்தைக் குடித்து ஹறாத்திலேயே வாழும் ஆபத்து உள்ளதல்லவா?உங்கள் பெண் கேட்டவரின் குண-நலன்கள் என்ன? மார்க்க ஈடுபாடு என்ன? என்பது குறித்து தீர விசாரியுங்கள்! சில பெற்றோர்கள் கூட இதில் பொறுப்பற்று நடந்துகொள்கின்றனர். திருமணம் முடித்த பின்னர்தான் மாப்பிள்ளை இன்னொரு இடத்தில் மணமுடித்துப் பிள்ளைகள் இருக்கும் செய்திகளும் தெரிய வருகின்றது.சிலர் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்டு ‘மாப்பிள்ளை லண்டனில் சிடிசன்; கலியாணம் முடிந்ததும் மகளையும் அங்கு அழைத்துப் போவார்!’ என்று பெருமையாகப் பேசிக்கொள்கின்றனர்.திருமணம் முடித்ததும் மாப்பிள்ளை போய் விஸா ஏற்பாடு செய்வதாகக் கூறிச் செல்கின்றார். பின்னர்தான் அவர் அங்கு மணமுடித்திருப்பதும், பெற்றோரைத் திருப்திப் படுத்துவதற்காகச் செய்த திருமணம்தான் இது என்பதும் தெரிய வருகின்றது.சிலர் வரதட்சணை பெறுவதற்காகவும், வெளிநாடு செல்வதற்கு ஏஜென்ஸிக்குப் பணம் கட்டுவதற்காகவும் மணமுடித்து விட்டு கை விட்டு விடுகின்றனர். நாம் பலதாரமணத்தைக் குறை கூறவில்லை அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவோர்களிடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே விளக்கியிருக்கின்றோம்.எனவே இது வாழ்க்கைப் பிரச்சினை. அவசரப்பட்டு முடிவு செய்து விட்டு அவதிப்பட முடியாது எனவே நிதானமாக முடிவு செய்ய வேண்டும். தீர விசாரித்துக்கொள்ள வேண்டும். திருமணத்திற்காக ஒருவர் பற்றி விசாரிக்கப்ட்டால் அவரது குறையைச் சொல்வது இஸ்லாத்தில் ஆகுமானதாகும். அது புறம் பேசுவதில் அடங்காது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.4 ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளுங்கள்!

திருமணம் முடிப்பதற்கு முன்னர் கணவன்-மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது சுன்னத்தாகும். சிலர் தான் நல்ல பிள்ளை என்று காட்ட ‘நீங்களே பார்த்து முடிவெடுங்கள்!’ என்று கூறி விடுகின்றனர்.‘பார்க்க வேண்டும்!’ என்று சொன்னால் என்ன நினைப்பார்கள்? என்று சிலர் நினைத்து, பெண்ணுக்கு மாப்பிள்ளையைப் பார்க்க இருக்கும் உரிமையை மறுக்கின்றனர். இது தவறாகும். ஒரு பெண், ‘நான் மணம் முடிக்கப் போகும் ஆணைப் பார்த்துத்தான் முடிவு செய்வேன்!’ என்று கூறப் பூரண உரிமையுடையவள். அதைப் பெற்றோர்கள் மறுக்கக் கூடாது; அங்கீகரிக்க வேண்டும்.5. இஸ்திஹாராச் செய்யுங்கள்!

உங்களைப் பெண் பார்த்தவர் பற்றி விசாரித்து அறிந்ததுடன் மட்டும் நின்று விடாமல் இஸ்திஹாராத் தொழுகை தொழுது அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுங்கள்! அல்லாஹ்வின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்!6. பெற்றோரின் சிரமத்தை உணருங்கள்!

வரதட்சணைக் கொடுமை மாப்பிள்ளை வீட்டாரால் மட்டும் நடப்பதில்லை. சிலபோது பெண் பிள்ளைகள் பெற்றோரின் கஷ்டங்களை உணராது நடந்துகொள்கின்றனர்.ஒருவன் தனது மூத்த மகளுக்குப் பணம் கொடுத்திருப்பார்; நகை கொடுத்திருப்பார்; வீடு கொடுத்திருப்பார். இளைய மகளுக்குத் திருமணத்தின் போது மாப்பிள்ளை ‘சீதனம் வேண்டாம்!’ என்று கூறினாலும் ‘மூத்த சகோதரரிக்கு கொடுத்தது போல் எனக்கும் வேண்டும்!’ என நிர்ப்பந்திக்கும் பெண்கள் உள்ளனர். திருமணம் முடிந்த பின்னர் கூட ‘தாத்தாவுக்கு வீடு கொடுத்தாங்க! நீங்க மட்டும் கஷ்டப்பட்டு வீடு கட்ட வேண்டுமா?’ எனத் தந்தையின் கஷ்டத்தை உணராது தன் கணவன் கஷ்டப்படக் கூடாது என்று எண்ணும் பெண்கள் உள்ளனர். உங்களுக்குத் திருமணம் தொடர்பான பல கனவுகள் இருக்கலாம். அதை நிறைவேற்றும் சக்தி உங்கள் பெற்றோருக்கு இல்லாது இருக்கலாம்.எனவே, மணப் பெண்களே!

உங்கள் குடும்பம், பெற்றோரின் கஷ்டம் உணர்ந்து நடந்துகொள்ளுங்கள்!7. அறிந்துகொள்ளுங்கள்!

திருமணத்திற்கு முன்னரே திருமணம் தொடர்பான சட்டங்களையும், விளக்கங்களையும் அறிந்துகொள்ளுங்கள்! குடும்பத்தில் பெண்ணின் பொறுப்பு, கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், கணவனின் உரிமைகள் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்! இதே வேளை, கணவனின் குடும்பத்தினருடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற விபரத்தையும், தெளிவையும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள்! உங்கள் இல்லறம் இனிமையாக அமைய இது பெரிதும் உதவும்!திருமணந் தொடர்பான சரியான தெளிவு இல்லாமல் தொலைபேசி மூலம் தொடர்பு, பேனா நண்பர், ‘ஃபேஸ்புக்’ தொடர்பு, இணையத்தில் அரட்டைத் தொடர்பு என்பவற்றை மட்டும் வைத்துக் கூட இன்று திருமணங்களும், திருட்டுத் திருமணங்களும் நடக்கின்றன. இவை இஸ்லாமிய நடைமுறைக்கும், குறித்த பெண்களின் வாழ்க்கைக்கும் பாரிய சவாலாக அமைந்து விடுகின்றன.எனவே, திருமணங் குறித்த தீர்க்க சிந்தனையும், நிதானமான பார்வையும் வளர்க்கப்பட வேண்டும்!

நன்றி இஸ்லாம் கல்வி

Sunday, June 13, 2010

பாசிச மோடிக்குப் புரியுமா ஒரு தாயின் பரிதவிப்பு?

பாசிச மோடிக்குப் புரியுமா ஒரு தாயின் பரிதவிப்பு?
குஜராத் மாநிலத்தின் கோத்ராவைச் சேர்ந்த பீபி காத்தூன் எனும் தாயின் மூன்று மகன்கள் கடந்த எட்டு ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோத்ராவில் ரயில் பெட்டி ஒன்றுக்குத் தீ வைத்து 58 பேரைக் கொடூரமாகக் கொலை செய்ய உதவினர் என்பதே இவர்கள் மீதான குற்றச்சாட்டு. இதுவரை இக்குற்றம் நிரூபிக்கப்படவில்லை. இச்சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாதச் சதி இருப்பதாகக் குஜராத் அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. அச்சதியை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என உயர்நீதி மன்றமும் உச்சநீதி மன்றமும் தீர்ப்பளித்துவிட்ட போதிலும் இம்மூவருக்கும் இன்றுவரை பிணைகூட கிடைக்கவில்லை.கோத்ரா ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள, பெரும்பாலும் உழைக்கும் மக்கள் நிறைந்த சேரியான ரஹ்மத் நகரில்தான் பீபி வசித்து வந்தார். கோத்ரா சம்பவம் நடந்த அன்று மாலை இச்சேரிக்குள் குவிந்த சீருடையணியாத போலீசார் பீபி காத்தூனின் மூன்று மகன்கள் உட்பட 14 இளைஞர்களைப் பிடித்துச் சென்றனர். இதனைக் கண்டு கொதித்தெழுந்த அப்பகுதிப் பெண்களிடம் தங்களது உயரதிகாரி விசாரித்தவுடன் அவர்களை அனுப்பிவிடுவதாகப் போலீசார் கூறினர். ஆனால் எட்டு ஆண்டுகளாகியும் அவர்கள் யாரும் திரும்பிவராத நிலையில் "இன்னமுமா அந்த உயரதிகாரி வரவில்லை?'' என பீபி காத்தூன் வருத்தத்துடன் கேட்கிறார்.கைதான அனைவரையும் முதலில் ரயில்வே காவல்நிலையத்தில் வைத்திருந்தனர். பின்னர் அவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. அவர்கள் இருக்குமிடத்தைப் பற்றிச் சொல்லக்கூட போலீசார் மறுத்துவிட்டனர். மூன்று மாதங்களுக்குப் பிறகு தாங்கள் அகமதாபாத் சபர்மதி சிறைச்சாலையில் இருப்பதாகக் கூறி பீபியின் மகன்கள் தங்களின் தந்தைக்குக் கடிதம் எழுதினர். கோத்ராவில் ரயில் பெட்டியைக் கொளுத்த சதி செய்ததாக இவர்களுடன் சேர்த்து 131 பேர் மீது "பொடா'' கருப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டது.சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தன் மகன்களைப் பார்த்த பீபிக்கு இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. அவர்கள் உடல் மெலிந்து பேயறைந்தது போலக் காணப்பட்டனர். தாங்கள் பட்ட அடிகள் சித்திரவதைகளைப் பற்றி அருகில் இருந்த சிறை ஊழியர்களுக்குக் கேட்காவண்ணம் கிசுகிசுக் குரலில் அவர்கள் விம்மினார்கள். தாங்கள் சிறுநீர் கழித்த வாளியிலேயே தண்ணீர் குடிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறினர். தன் மகன்களிடம், "நம்பிக்கை தளர வேண்டாம்'' என்றும் "சிறையிலிருந்து வெளிக்கொணர தன்னால் இயன்றதனைத்தையும் செய்வதாகவும்'' அவர்களின் தந்தை உறுதியளித்தார்.பீபியின் மூத்த மகனுக்கு, பள்ளி செல்லும் வயதில் இரு மகன்கள் இருந்தனர். கைதாவதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் இரண்டாவது மகனுக்குத் திருமணமாகியிருந்தது. அவர் சிறையிலிருக்கும்போதுதான் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பீபியின் கடைசி மகனோ பதின்ம வயதில் இருந்தான். வேலைக்குச் சென்று சம்பாதிக்க மகன்கள் யாரும் இல்லாத நிலையில் வீட்டில் உணவுக்கே திண்டாட்டமானது. பீபியின் வயதான கணவர் கிடைத்த வேலையைச் செய்துகொண்டிருக்க பீபியும் அவரது இரு மருமகள்களும் வீட்டு வேலை கிடைக்குமா எனத் தேடிக் கொண்டிருந்தனர். ஆனால் தீவிரவாதியின் குடும்பம் என்றும் பொடா குடும்பம் என்றும் முத்திரை குத்தப்பட்டதால் யாரும் வேலை கொடுக்கவில்லை.2004ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய முன்னணி அரசு, பொடா கருப்புச் சட்டத்தை திரும்பப் பெற்றது. ஆனால் சட்டத்தை முன்தேதியிட்டுத் திரும்பப் பெறாததால் பொடாவில் கைதானவர்கள் விடுவிக்கப்படவில்லை. அச்சட்டத்தின் அடிப்படையிலேயே வழக்கு நடந்தது. தில்லியின் புகழ்பெற்ற கிரிமினல் வழக்குரைஞர்களான நித்தியா இராமகிருஷ்ணன் மற்றும் ஹசன் போன்றவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடினர். குஜராத் அரசின் வாதப்படி தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் முன்பே திட்டமிட்டு இதனைச் செய்ததாகவும் வெளியிலிருந்து ரயில் பெட்டிக்குள் பெட்ரோலை, தனது குடும்பத்தை உயிரோடு வைத்திருக்கப் பிச்சையெடுக்கும் இழிநிலைக்குத் தள்ளப்பட்ட கோத்ராவைச் சேர்ந்த ஏழைத்தாய் பீபி காத்தூன் ஊற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் வெளியிலிருந்து ரயில் பெட்டிக்குள் பெட்ரோலை ஊற்றுவது என்பது மனித சக்தியால் இயலாத காரியம் எனத் தடயவியல் அறிக்கை கூறுகிறது. அதேபோல ரயில் பெட்டிக்குள் பெட்ரோலின் மூலக்கூறான "ஹைட்ரோ கார்பனின்'' தடயங்கள் எதுவும் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மாநிலப் போலீசாரால் புனையப்பட்ட இவ்வழக்கில் இதுபோன்று மேலும் பல ஓட்டைகள் இருப்பதாக இவ்வழக்குரைஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இவ்வழக்கு நடைபெற்ற எட்டு ஆண்டுகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாகப் பல தீர்ப்புகள் வந்துள்ளன. ஒவ்வொரு முறையும் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என பீபியும் மற்றவர்களும் நம்பினர். ஆனால் இவர்களது நம்பிக்கை ஒவ்வொரு முறையும் தகர்ந்தது. 2005ஆம் ஆண்டில் பொடா மறு ஆய்வுக்குழு இந்த வழக்கில் தீவிரவாத சதி இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை எனவும் இந்தியாவின் பாதுகாப்பைக் குலைக்கும் அம்சங்கள் எதுவும் இல்லை எனவும் உறுதிப்படுத்தியது. இதனால் பொடாவின்கீழ் இவர்கள் மேல் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதனை ஏற்றுக்கொள்ள விரும்பாத குஜராத் அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் உயர்நீதி மன்றமும் பின்னர் உச்சநீதி மன்றமும் மறு ஆய்வுக் குழுவின் முடிவையே உறுதிசெய்தன. இருப்பினும் குஜராத் அரசு குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கவில்லை. அவர்கள் மீது சாதாரண குற்றவியல் சட்டங்களின்கீழ் வழக்குத் தொடுத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கிடைக்கக்கூடிய தண்டனைக் காலத்தைவிட அதிகமான வருடங்களை விசாரணைக் கைதிகளாகவே சிறையில் கழித்துவிட்டனர். இருந்தபோதிலும் இவர்களுக்கு சாதாரண குற்றவியல் சட்டங்களின்கீழ் கூட பிணை வழங்கப்படவில்லை.இதனிடையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பீபியின் கணவர் தொண்டைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். சாகக் கிடக்கும் தங்கள் தந்தையைக் கடைசியாகப் பார்க்க மகன்களுக்கு ஆளுக்கொரு நாள் பரோல் கொடுக்கப்பட்டது. அவரது மரணத்திற்குப் பிறகு அப்பெரிய குடும்பத்தைச் சுமக்கும் பாரம் பீபியின் தோளில் இறங்கியது. மூப்பின் காரணமாகவும் ஒரு விபத்தின் காரணமாகவும் அவரால் வேலை செய்ய இயலவில்லை. அவர் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். நடக்க முடியாத அவர் கோத்ரா நகரத்து வீதிகளில் நொண்டி நொண்டிச் சென்று பிச்சையெடுக்கிறார். பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த அவரது மூத்த பேரனின் படிப்புக்குத் தேவைப்பட்ட பணத்தை அவர் பிச்சையெடுத்துச் சேர்த்துத் தந்தார். ஆனால் அவன் பொதுத்தேர்வில் தோல்வியடையவே அவனைப் பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டார். அவருடைய இளைய பேரனை இன்னமும் முன்னதாக எட்டாம் வகுப்போடு நிறுத்திவிட்டார். அவர்கள் இருவரும் தற்போது தினமும் ஐம்பது ருபாய் கூலிக்குப் பட்டறையில் வேலை செய்கின்றனர்.சிறையிலிருப்பவர்களைப் பார்க்கச் செல்வதற்கான பேருந்துக் கட்டணச் செலவுகள் அவர்களது ஒரு மாதச்சம்பளத்தை விழுங்கிவிடுவதால் தற்போது அவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே செல்கின்றனர். சிறையில் உள்ள பீபியின் மகன்கள் உடல் மெலிந்து காசநோய் போன்ற கடும் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பீபியின் கடைசி மகனான சபீக் சிறையில் புத்தி சுவாதீனம் இழந்துவிட்டான். காகிதத்தையும் குப்பையையும் பொறுக்கித் தின்கிறான். சில சமயங்களில் பிற கைதிகளையும் சிறை ஊழியர்களையும் தாக்குகிறான். தன் குடும்பத்திரையே அவனால் அடையாளம் காணமுடியவில்லை. "அவனை அவர்கள் பிடித்துச் சென்ற வயதில் பால்பற்கள் விழுந்து அவனுக்கு புதிய பற்கள்கூட வளரவில்லை. எனது செல்லமகனை அவர்கள் எப்படி எல்லாம் சீரழித்து விட்டார்கள்?'' என பீபி கதறுகிறார். அவனுக்கு சிகிச்சையளிக்க பரோல் கொடுக்குமாறு அவர்களது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.உள்ளத்தை உலுக்கும் இந்தச் செய்தியை ஹிந்து ஆங்கில நாளேட்டில் எழுத்தில் வடித்த ஹர்ஷ் மந்தர் அவர்களும் அதன் சுருக்கத்தை, "பாசிச மோடிக்குப் புரியுமா ஒரு தாயின் பரிதவிப்பு?" எனும் தலைப்பில் 'புதிய ஜனநாயகம்' இணைய இதழில் எழுதிய திரு. சுந்தர் அவர்களும் அதைப் பதிவேற்றிய தமிழரங்கம் இணையமும் நமது ஆழிய நன்றிக்கு உரியவர்கள்.- சத்தியமார்க்கம்.காம்தனது குடும்பத்தை உயிரோடு வைத்திருக்கப் பிச்சையெடுக்கும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டதை எண்ணி பீபி கூனிக் குறுகுகிறார். மேலும் தன் மகன்கள்மீது இப்படிப்பட்ட படுபாதகக் குற்றம் சுமத்தப்பட்டதை எண்ணி வெட்கப்படுகிறார். "மகனே! நான் படிப்பறிவில்லாதவள். இந்தச் சட்டங்கள் எனக்குப் புரிவதில்லை. ஆனால் அப்பாவியான என் மகன்கள் ஏன் இத்தனை ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என எனக்கு விளக்குங்கள்'' எனக் கேட்கிறார்.தன் பேச்சைக் காதுகொடுத்துக் கேட்பவர்களிடம் அவர் கெஞ்சுவது ஒன்றுதான்: "என் மகன்களைச் சிறையிலிருந்து விடுவிக்க உங்களால் உதவ முடியுமா? அவர்கள் விடுதலையாவதைக் காண நான் உயிருடன் இருப்பேனா?''மூலம் : தி ஹிந்துதமிழில் : சுந்தர் - புதிய ஜனநாயகம் (தமிழரங்கம்)


Thanks Satyamargam

Monday, April 26, 2010

இஸ்லாம் கூறும் மனித வள மேம்பாடு

இஸ்லாம் கூறும் மனித வள மேம்பாடு

இன்று தமிழில் பல மனித வள மேம்பாட்டு நூல்கள் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப் பட்டும், நேரடியாக தமிழிலும் வருகின்றன. தமிழ் நாட்டிலும், தமிழர்கள் வாழும் பல வெளிநாடுகளிலும், தமிழில் பல்வேறு மனித வள மேம்பாட்டு பயிற்சி முகாம்கள் நடக்கின்றன. தமிழில் மனித வள மேம்பாட்டு நூல்களின் முன்னோடி பன்னூலாசிரியர் அறிஞர் எம். ஆர். எம். அப்துர் ரஹிம் அவர்களே. மனிதர்களுக்கு அனைத்து துறைகளிலும் வழிகாட்டும் இஸ்லாம், மனித வள மேம்பாட்டு துறையிலும் வழிகாட்டுகிறது.


நம்பிக்கை

இஸ்லாத்தின் அடிப்படையாக இருப்பது ஒரிறைக் கொள்கை. படைத்த ஒருவனைத் தவிர வேறு யாருக்கும் வழிபடக் கூடாது என்பதே, அதன் பொருள். இதனால் மனிதனது சுதந்திரம் இயல்பிலேயே உறுதி செய்யப்படுகிறது. அடுத்து, ஈமான் என்னும் நம்பிக்கையின் கிளைகளில், இறைநாட்டத்தை நம்புவதும் ஒன்று. இதனால், நன்மைகளும், தீமைகளும் இறைவனின் நாட்டத்தின் படியே நடக்கின்றன என்று நம்ப வேண்டும். இந்த அடிப்படையிலேயே நம் இறுதித் தூதர் முஹமது(ஸல்) அவர்கள், வளத்தில் பூரித்துப் போய்விடவும் வேண்டாம், சோதனையில் துவண்டு விடவும் வேண்டாம் என வழிகாட்டுகிறார்கள்.

பிரார்த்தனைகள்

இஸ்லாத்தின் ஐந்து கடமைகளும், மனித வள மேம்பாட்டுக் கலையை கற்றுத் தருகின்றன. ஒரே இறைவனை மட்டும் வழிபடுவதும், அவனது தூதர் முஹமது நபி(ஸல்) அவர்களது வழிகாட்டுதலின் படி நடப்பதும் முஸ்லிம்களின் முதல் கடமை. இதற்கான உறுதி மொழியை தெரிவிப்பதுடன் தங்கள் வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டும். இது கலிமா என்னும் இஸ்லாத்தின் முதல் கடமை. தொழுகை நேர நிர்வாகத்தை கற்றுத் தருகிறது. நோன்பு கோபத்தை கட்டுப் படுத்துகிறது. ஜகாத், சக மனிதர்களின் துன்பத்தைக் களைகிறது. ஹஜ், உலகம் முழுவதும் வாழும் பல்வேறுபட்ட மக்கள் சமூகத்தை ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இஸ்லாம், தொழுகையைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும் இறைவனிடம் உதவி தேட நமக்கு வழிகாட்டுகிறது. இறைவினிடம் நாம் கேட்கும் பிரார்த்தனைகள் தன்னம்பிக்கையை அதிகரிப்பதாக நவீன உளவியலும் உறுதி செய்துள்ளது.

திருக்குர்ஆன்

திருக்குர்ஆனில் பல நபிமார்களின் வரலாறு சுட்டிக்காட்டப் படுகிறது. அவர்கள், சந்தித்த சோதனைகளும், அதனை அவர்கள் எதிர்கொண்ட விதமும் நமக்கு படிப்பினையாகும். அது போல, குர் ஆனை தினமும் ஓதுவதால், உள்ளத்துக்கு அமைதி கிடைப்பதுடன், நம் அன்றாட வாழ்வின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

முஹமது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு


முஹமது நபி(ஸல்) அவர்களது மக்கா வாழ்க்கை, மதீனா வாழ்க்கை இரண்டிலுமே நமக்கு படிப்பினை இருக்கிறது. அவர்கள் நபித்தோழர்களுடன் பேணிய கூட்டு வாழ்வு, பொது வாழ்க்கையில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டுகிறது. அவர் வணிக வாழ்க்கையில் பின்பற்றிய நடைமுறைகள் வணிகர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளே. திருமண வாழ்க்கையில் தம் துணைவியரால் ஏற்பட்ட சோதனைகளை அவர் எதிர்கொண்ட விதம், திருமணமான ஆண்களுக்கு படிப்பினையென்றால், நபித்துணைவியரின் தியாக வாழ்க்கையும், நபித்தோழியரின் தியாக வாழ்க்கையும் திருமணமான பெண்களுக்குப் படிப்பினைகளே.


இவற்றையெல்லாம் விட, ஆட்சியாளராய் முஹமது நபி(ஸல்) எளிமை, தூய்மை, நேர்மை, நீதி ஆகியவற்றை கடைபிடித்தார்கள். ஒரு முஸ்லிமுக்கு எதிராக, யூதருக்கு சார்பாக நீதி வழங்கி சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டினார்கள். அவர்கள் ஒருபோதும், இனவெறியை ஆதரிக்கவில்லை. மாறாக, அதனைக் கடுமையாகக் கண்டிக்கவும் செய்தார்கள். இவற்றில் முஸ்லிமல்லாத ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல. முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கும் மிகப் பெரும் படிப்பினை இருக்கிறது.

நிறைவுரை

இஸ்லாம் கூறும் மனித வள மேம்பாடு என்பது தனியொரு நூலாகவே எழுத வேண்டிய தலைப்பாகும். இதனை ஒரு சிறிய கட்டுரையில் அடக்கி விட முடியாது. எனினும், இது தொடர்பாக மேலும் அறிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் தேவையான குறிப்புகளை அளித்துள்ளதாக நினைக்கிறேன். இக்கட்டுரையில் தகவல் பிழைகளிருப்பின் அன்புடன் சுட்டிக்காட்டுங்கள்.


நன்றி: பேங்காக் தமிழ் முஸ்லிம் பள்ளிவாசல் திறப்பு விழா மலர் - 25 ஆகஸ்டு 2005


Thanks Abdul Rahman

Friday, April 23, 2010

கிரிக்கெட் விசிரியுடன் ஒரு உரையாடல்


IPL போட்டி இறுதிப்போட்டியை நெருங்கி விட்டது.இந்த கிரிக்கெட் மோகம் எந்த அளவு மக்களை பாதித்துள்ளது என்பதை முகைதின் சகோதரர் என்பவர் அனுப்பிய கிழ்கண்ட மின்னெஞ்சல் உணர்த்துக்கிறது.
இளைஞர்களையும், போக்குவதற்கு பொழுதுள்ளவர்களையும் இன்றைய பொழுதில் முழுமையாக ஆக்கிரமித்திருப்பது ஐ பி எல் கிரிக்கெட் போட்டிகள். அனைத்துவகை செய்தி ஊடகங்களும் இது குறித்த செய்திகளை மக்கள் மறந்துவிடாதவாறு அவர்களுக்குள் திணித்துக்கொண்டே இருக்கின்றன. அப்படி திணிக்கப்படும் செய்திகளால் கிரிக்கெட் என்பது காற்றைப் போல், உணவைப்போல் இன்றியமையாததாகிவிட்ட ஒரு இளைஞனுடன் நடந்த உரையாடல் இது.


இந்த உரையாடலை தொடங்குமுன், இந்த உரையாடல் நடந்த களத்தைப் பற்றி அறிந்து கொள்வதும் தேவையானதாகும், அது இந்த உரையாடலின் பரிமாணத்தை உணர்த்த உதவும். சௌதி அரேபியா. இந்தியாவிலிருந்து வந்து இங்கு பணிபுரியும் சில மேல்மட்ட அதிகாரிகளுக்கு கனமான ஊதியமும், நிறைவான வசதிகளும் வாய்த்திருக்கலாம். ஆனால் கடைநிலை ஊழியர்களாக இங்கு பணிபுரியும் இந்தியர்களே அதிகம். அப்படி கடைநிலை ஊழியர்களாக இருக்கும் குறிப்பாக தமிழர்களும் குறிப்பிடத்தக்க அளவு பணிபுரியும் ஒரு நிறுவனத்தின் தங்கும் விடுதி. சனி முதல் வியாழன் வரை வேலை நாட்கள், வேலைநேரம் காலை எட்டிலிருந்து தொடங்கி மாலை நான்கு மணிவரை இடையில் ஒருமணிநேரம் மதிய உணவுக்காக இடைவேளை. சௌதியின் வேறுபல நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் ஓரளவு நல்ல நிலை. காலை ஆறுமணிக்கு எழுந்தால் காலைத்தேவைகளை முடித்து உணவாக ஒரு குப்புஸை (ஒருவகை ரொட்டி) கடித்துக்கொண்டு மதியத்திற்காக அடுக்குச்சட்டியில் (டிபன் கேரியர்) செய்து வைத்திருக்கும் உணவை எடுத்துக்கொண்டு ஏழுமணிக்குள் வந்தால் பேரூந்து கிடைக்கும், கொஞ்சம் தாமதமானாலும் அன்று விடுமுறை நாளாக எண்ணிக்கொள்ளவேண்டியது தான் சம்பளம் கிடைக்காது.வேலை செய்யும் இடத்தில் நீண்ட வரிசையில் நின்று சோதனைகளை முடித்துக்கொண்டு உள்ளே சென்று எந்த நேரத்தில் அட்டையை அடித்துக்கொள்கிறோமோ (பஞ்சிங் கார்ட் சிஸ்டம்)அப்பொதிலிருந்து தான் நமது வேலை நேரம் தொடங்கும். எட்டு மணிக்குள் அடித்துவிட முடிந்தால் அன்று நமக்கு நல்ல நாள். பெரும்பாலானோருக்கு பத்து நிமிடம் வரை தாமதமாகிவிடும். திரும்பும் போதும் 4.10க்கு பேருந்து கிளம்பிவிடும் என்பதால் ஓரிரு நிமிடங்களுக்கு முன்னதாகவே அட்டை அடிக்கவேண்டியதிருக்கும், இவைகள் மொத்தமாக சேர்ந்து மாதக்கடைசியில் அரை நாளை விழுங்கியிருக்கும். மீண்டும் விடுதிக்கு வந்துசேர ஐந்து மணிக்கு மேலாகிவிடும்,. பின்னர் குளித்து முடித்து ஒரு தேனீரை போட்டு குடித்துவிட்டு, சமையலை தொடங்கினால் (இரவுக்கும் மறுநாள் மதியத்திற்கும்) இரவுச்சாப்பாட்டை முடிக்க ஒன்பதை தாண்டிவிடும். பின் அண்மையில் வெளிவந்த திரைப்படத்தை ஓடவிட்டு கட்டிலில் சாய்ந்தால் எப்போது தூங்கினோம் என்று அவர்களுக்கே தெரியாது. வெள்ளிக்கிழமை விடுப்பு என்பது ஒரு மகிழ்வான விடுதலை உணர்வை தரக்கூடிய ஒன்று. வாரத்தின் ஒவ்வொறு நாளும் வெள்ளிக்கிழமையை இலக்காகக் கொண்டே நகரும். வியாழன் இரவில் எல்லோரின் முகங்களும் சந்தோசத்தை பூசிக்கொண்டிருக்கும். பெரிய சத்தத்தில் திரைப்படப் பாடல்கள் ஒலிக்கும். ஒருபக்கம் இந்தி, மறுபக்கம் தமிழ், இடையில் மலையாளம், ஆங்கிலம் (பிலிப்பைனிகள்) என்று கலவையாய் பாடல்கள் ஒலிப்பது ஒரு தனி அனுபவமாக இருக்கும். வெள்ளி விடுமுறை என்றாலும் அறையை சுத்தம் செய்வது, துணி துவைப்பது போன்றவைகள் தான் வெள்ளியின் பகலை நிறைத்திருக்கும். இப்படியான தருணத்தில் தான் ஐ பி எல் வந்தது.

முதலில் இந்த வித்தியாசம் வெளிப்படையாக தெரிந்தது குளியலறைகளில் தான். வரிசையாக கட்டிவிடப்பட்டிருக்கும் குளியலறைகளில் மாலை ஐந்து மணிக்கு மேல் ரகளையாக இருக்கும். முதலில் குளிப்பதற்கு போட்டியே நடக்கும். ஏனென்றால், முதலில் வேகமாக வரும் தண்ணீர் பின்னர் படிப்படியாக வேகம் குறைந்து சிறுவன் ஒருவன் சிறுநீர் கழிப்பது போல் வரும். முதலில் நுழைபவர்கள் நேரம் எடுத்துக்கொள்ள வெளியில் இருப்பவர்களோ பொருமையிழந்து கதவை தட்டிக்கொண்டும், கத்திக்கொண்டும் இருப்பர். ஆனால் திடீரென்று குளியலறைகள் வெறிச்சோடின. சாவகாசமாக ஆறுமணிக்கு வந்தாலும் ஆனந்தமாய் குளிக்க முடிந்தது. பின்னர் விசாரித்தபோதுதான் தெரிந்தது. எல்லோரும் வேலையை விட்டு வந்ததும் கிரிக்கெட்டின் முன் அமர்ந்து தொலைக்காட்சிப் பெட்டியை வெறித்துப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது. உழைத்துக்களைத்தவர்களுக்கு அவர்களை உற்சாகப்படுத்தும் ஒரு மாறுதல் தேவைதான் என்றாலும். அத்தியாவசியமான எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டு ஒரு விளையாட்டு அனைத்தையும் விழுங்கிக் கொள்ள முடியுமென்றால் அது பொழுதுபோக்கா? இல்லை வேதனையா?

வயது இருபத்தைந்தை தாண்டியிருந்தாலும் தங்கைகளின் திருமணம் முடிந்த பிறகு தான் தனது திருமணம் என்பதில் உறுதியாக இருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞன் அவன். எவ்வளவு கடினமான வேலை என்றாலும் தயங்காமல் செய்யக்கூடிய கடின உழைப்பாளி. ஓவர்டைம் வேலை என்றால் முதலில் கைதூக்கும் அளவுக்கு தேவையுள்ளவன். என் நண்பனான அவனும் தான் இந்த கிரிக்கெட் அலையில் அடித்துச்செல்லப்பட்டிருந்தான். இனி நானும் அவனும்.

நான்: ஒருவன் பந்து வீசுவதும், ஒருவன் மட்டையால் அடிப்பதும் இன்னும் சிலர் பந்தை தடுப்பதும் என்று சற்றேறக்குறைய ஒரே மாதிரியான காட்சிகளாகவே திரும்பத்திரும்ப வரும் இதில் அப்படி என்னதான் இருக்கிறது இதில்?நண்பன்: எல்லாவற்றையும் உங்கள் கண்ணோட்டத்திலேயே பார்க்கக்கூடாது. தமிழ் நாடு விளையாடும் போது தமிழன் என்றமுறையில் அதை பார்ப்பது ஒரு உணர்வு. ஒரு பொழுது போக்கு. வேலை நேரம் என்றால் பார்க்கமுடியுமா? வேலை முடிந்து வந்து தானே பார்க்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு ரிலாக்ஸ்.நான்: இல்லை. நீங்கள் ஒரு படத்தை பார்ப்பதற்கும், வெறொரு நிகழ்சியை பார்ப்பதற்கும் கிரிக்கெட்டை பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது இல்லையா?நண்பன்: ஆமாம் இருக்கிறது ஒரு படம் பார்ப்பது பொழுது போக்கு மட்டும் ஆனால் கிரிக்கெட் அதோடு கொஞ்சம் உணர்வும் கலந்தது, நம்முடைய அணி ஆடும் போது நாமே ஆடுவது போன்று ஒரு உணர்வு.நான்: இந்த நம்முடைய அணி என்ற உணர்வு எப்படி வந்தது? தமிழ்நாட்டு அணி அல்லது இந்திய அணி என்பதாலா? என்றால் இந்த உணர்வு விளையாடும் போது மட்டும் தானா? அல்லது மற்ற தருணங்களிலும் வருமா? அதுவும் கிரிக்கெட் விளையாட்டில் மட்டும் தானே இந்த உணர்வு வருகிறது மற்ற விளையாடுகளில் வருவதில்லையேநண்பன்: மற்ற விளையாட்டுகள் இருந்தாலும் எல்லோராலும் விரும்பப்படுவது கிரிக்கெட் தான். என்னதான் மாநில வித்தியாசம் இருந்தாலும் கிரிக்கெட் என்றதும் எல்லோரும் ஒன்றாகி இந்தியா எனும் உணர்வு வருகின்றதல்லவா அது தான் கிரிக்கெட்டின் வெற்றி.நான்: இந்த தேசிய உணர்வு விளையாடில் மட்டும் தானா? தேசியம் என்பது நாடு காடு மலை இதுமட்டுமா? அல்லது நாட்டிலுள்ள மக்களா? நாட்டிலுள்ள மக்கள் குறித்து வராத தேசிய உணர்வு கிரிக்கெட்டில் மட்டும் வருகிறது என்றால் அது மெய்யாகவே தேசிய உணர்வு தானா?நண்பன்: யார் சொன்னது விளையாட்டில் மட்டும்தான் என்று? கார்கில் போர் நடந்த போது தமிழகம் தான் அதிகம் நிதி கொடுத்தது. வடமாநிலத்தில் நடந்த ரயில் விபத்து குறித்து ஒரு பிலிப்பைனி தவறாக பேசியபோது சண்டையிடவில்லையா? இதையெல்லாம் என்னவென்று நினைக்கிறீர்கள் நீங்கள்?நான்: இது என்ன மாதிரியான தேசிய உணர்வு? ரயில் விபத்து குறித்து அந்த பிலிப்பைனி என்ன மாதிரியான விமர்சனத்தை முன்வைத்தான்? இந்தியாவில் எதுவுமே சரியிருக்காது , புல்லட் ரயில் மாதிரியான வசதிகள் இல்லை, கடக்கும் பாதைகள் (லெவல் கிராசிங்) பாதுகாப்பற்று இருக்கும் என்று தானே. இதற்குத்தானே நீங்கள் பிலிப்பைன்ஸை விட இந்தியா முன்னேறிய நாடு என்று இந்தியாவின் வீரதீர பிரதாபங்களை எடுத்துவிட்டு சண்டையிட்டீர்கள். இதையே அந்த பிலிப்பைனி, மக்கள் மீது அக்கரையற்ற அரசுகள், பிலிப்பைன்ஸை போலவே ஊழல் மலிந்த அரசியல்வாதிகள், மக்களுக்கு சிறப்பான வசதிகளை, குறைந்தபட்ச குறைவற்ற சேவையை வழங்குவதில் அலட்சியமாக இருக்கும் அதிகாரிகளால் தான் இது போன்ற விபத்துகள் நடக்கின்றன என்று அவன் விமர்சனம் செய்திருந்தால் நீங்கள் சண்டையிட்டு இருப்பீர்களா? மாட்டீர்கள். ஆக உங்களின் தேசிய உணர்வு என்பது மக்களின் கோணத்திலிருந்தல்ல ஆள்பவர்களின் கோணத்திலிருந்து எழும் தேசிய உணர்வு. இந்த கிரிக்கெட்டும் அதே போன்ற ஒன்றுதான்.நண்பன்: நீங்கள் என்ன சொல்கிறீர்கள் இதிலுமா அரசாங்கம் மக்கள் ஏழை பணக்காரன் என்று பிரித்துப்பார்ப்பது. எல்லோரும் தான் கிரிக்கெட் பார்க்கிறார்கள். அரசாங்கத்தில் வேலைபார்ப்பவர்கள் கிரிக்கெட் பார்ப்பதில்லையா? இந்தியா விளையாடுகிறது, தமிழ்நாடு விளையாடுகிறது என்றுதான் அவர்களும் பார்க்கிறார்கள். இதிலென்ன ஆள்பவர்கள் கோணம் மக்கள் கோணம்?

நான்: அப்படியில்லை. ஆள்பவர்களுக்கு எதிலெல்லாம் சாதமான அம்சங்கள் இருக்கிறதோ அதிலெல்லாம் தேசிய உணர்வு கிளறிவிடப்படும். ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி எல்லோரும் அதை தேசிய உணர்வாக ஏற்றுக்கொள்ள வைக்கப்படுவார்கள். கிரிக்கெட்டை எடுத்துக்கொள்ளுங்கள், கிரிக்கெட்டிலிருந்து கிடைக்கும் ஒட்டுமொத்த வருமானத்தில் கிட்டத்தட்ட முக்கால்பங்கு இந்தியா பாகிஸ்தான் இலங்கை இந்த மூன்று நாடுகளிலிருந்து கிடைக்கிறது. அதனால் தான் இந்த விளையாட்டு பெருமிதமாக தேசிய ஆளுமை கொண்டதாக இருக்கிறது.நண்பன்: இருக்கட்டுமே, அதனால் என்ன? பிரிந்து கிடக்கும் மக்களை ஒன்றிணைக்கிறதே, அந்த வகையில் எடுத்துக்கொள்ளாலாமல்லவா?நான்: நாம் எதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதை நாம் தீர்மானிப்பதில்லை என்பதுதான் இதில் புரிந்துகொள்ள வேண்டியது. கிரிக்கெட் அளவுக்கு மற்ற விளையாட்டுகளை பற்றி பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் செய்தி வருகிறதா? அப்படி வந்தால் அந்த விளையாட்டை நீங்கள் தேசிய உணர்வுடன் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். இதிலாவது ஒன்றுபடுகிறோமே என்று இதை மேலோட்டமாக புரிந்து கொள்ளக்கூடாது. அவர்களுடைய நலன் தான் இதில் குறிக்கோள், நாம் எந்த விசயத்தில் சேர்ந்திருந்தால் அவர்களுக்கு லாபமோ அந்த விசயத்தில் நாம் சேர்ந்திருக்குமாறு நிர்ப்பந்திக்கப்படுவோம். பிரிந்திருப்பது லாபமென்றால் அந்த விசயத்தில் பிரிந்திருக்க நிர்ப்பந்திக்கப்படுவோம். இது தான் இங்கு எல்லா விசயத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. கிரிக்கெட் உட்பட.நண்பன்: அது எப்படி நான் கிரிக்கெட் பார்க்கவேண்டும் என்று யார் என்னை நிர்ப்பந்திக்க முடியும்? எனக்கு விருப்பமிருப்பதால் தான் பார்க்கிறேன். விருப்பமில்லாவிட்டால் பார்க்கமாட்டேன், அவ்வளவுதான்.நான்: எது உங்களுடைய விருப்பம்? இரண்டு வாரமாக சி பிளாக்கில் ஏ சி வேலை செய்யவில்லை. கண்டுகொள்ளாமலிருக்கும் பராமரிப்புத்துறையில் போய் புகார்செய்வோம் என்று எல்லோரையும் அழைத்தேன். நீங்களும் கூட வருவதாய் சொன்னீர்கள். ஆனால் வந்தது மூன்று பேர்தான். நீங்களோ தோற்றுப்போன ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்து விட்டு தோற்றுப்போன உணர்வுடன் டோனியை திட்டிக்கொண்டிருந்தீர்கள். எத்தனை பேர் சமைப்பதற்கு நேரமில்லாமல் மதியத்திலும் குப்புஸை சப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். சமைப்பவர்கள் கூட ரசத்திற்கும் மோர்க்குளம்பிற்கும் மாறிவிட்டார்கள். நியாயமாக சொல்லுங்கள் சாப்பாட்டைவிட, ஏ சியை விட கிரிக்கெட் முக்கியமாகி விட்டதற்கு விருப்பம் மட்டும்தான் காரணம் என்கிறீர்களா?நண்பன்: என்ன இருந்தாலும் எனக்கு விருப்பமில்லாவிட்டால் நான் பார்க்கமாட்டேன் அல்லவா?நான்: உங்களுக்கு எப்படி இந்த விருப்பம் ஏற்பட்டது என்பதுதான் விசயம். எல்லா பத்திரிக்கைகளிலும் என்னென்ன தேதியில் என்ன நேரத்தில் எந்தெந்த அணிகள் ஆடுகின்றன என்ற விபரங்கள் மீண்டும் மீண்டும் வெளியிடப்படுகின்றன. எந்த அணிக்கு என்ன புள்ளிகள் என்று முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துகளில் வெளியிடுகின்றன. தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன. செய்திகளில் முக்கிய செய்தியாக வருகிறது. இப்படித்தானே உங்களின் விருப்பங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை விமர்சித்து கருத்துச்சொன்னால், உண்மையை சொன்னால் சிறைத்தண்டனை என்று சட்டமியற்றப்பட்டிருக்கிறது, அணுவிபத்து நடந்தால் அதுவரை லாபம் சம்பாதித்த முதலாளிகள் இழப்பீடு கொடுக்கவேண்டியதில்லை என்று சட்டம் வரவிருக்கிறது, பூமியிலுள்ள கனிமங்களை தனியாருக்கு கொடுக்கவேண்டுமென்பதற்காகவே அங்கு வாழ்ந்துவந்த பழங்குடி மக்களை விரட்டியடிக்கிறார்கள். இவைகள் பற்றி பத்திரிக்கைகளும் , தொலைக்காட்சிகளும் கிரிக்கெட்டைப்போல விரிவாக நிகழ்ச்சிகளை நடத்தியிருக்குமா? ஏன்? எது முக்கியம்? ஆக அவர்களுக்கு எதை மறைக்கவேண்டுமோ அதை மறைக்கிறார்கள், எதை வெளிப்படுத்த வேண்டுமோ அதை வெளிப்படுத்துகிறார்கள். சரியானதை விட சுலபமானதை செய்வதற்கு உங்களை பழக்கப்படுத்துகிறார்கள். நீங்கள் எதை செய்யவேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்களோ, அதை சுலபமாக உங்களுக்கு கிடைக்கும்படி செய்கிறார்கள். இது தான் உங்களின் விருப்பமாக மாறுகிறது.நண்பன்: சரிதான், இதற்கு நான் என்ன செய்யமுடியும்? நான் ஒருவன் மாறுவதால் என்ன ஆகப்போகிறது.நான்: இதுதான். எல்லோரும் கூறும் சப்பைக்கட்டு இதுதான். நீங்கள் ஒருவர் பார்ப்பதால் டோனி பத்து ரான் அதிகம் அடித்துவிட முடியுமா? இல்லை பாலாஜி ஒரு விக்கெட் அதிகம் எடுத்துவிடமுடியுமா? இருந்தாலும் நீங்கள் பார்க்காமல் இருப்பதில்லையே. உங்களுக்கு பயன்படாத ஒன்றை பார்த்து உங்கள் நேரத்தை வீணக்குவதைவிட பயனுள்ள நல்ல விசயங்கள் எதையாவது தெரிந்து கொள்ளலாமே.நண்பன்: !!!!!!!!!! (மௌனம்)என் நண்பன் பதில் சொல்லமுடியாமல் அமைதியாய் இருந்தாலும், அவன் கண்களில் அடுத்த இரண்டு ஆட்டங்களிலும் வென்றால்தான் அரைஇறுதிக்குள் நுழைய முடியும். டோனியால் வெல்லமுடியுமா? எனும் கேள்வியே தொக்கி நிற்கிறது என்பதை நான் அறிவேன். ஆனாலும் மாற்றங்கள் மெதுவாகவேனும் வரும், வந்தே தீரும்.


Thanks Mohideen  - United Muslim Groups Mail

Wednesday, April 21, 2010

Innocent Assumption
மின்னெஞ்சலில் வந்தது

Monday, April 19, 2010

தஞ்சாவூர் நகரத்தின் 1776 தோற்றம்

மின்னெஞ்சலில் வந்த தஞ்சை நகரத்தின் 1776 ஆம் ஆண்டு புகைப்படங்கள்

Tuesday, March 23, 2010

டெபிட் கார்டாக இருந்தாலும் ஜாக்கிரதை

கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பது நம்மை கடனாளியாக்கும் என்றால், போகப் போக டெபிட் கார்டுகளை வைத்திருப்பது 'சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் கதை'யாகி விடும் போலிருக்கிறது.


"கிரெடிட் கார்டு இருந்தா நம்ம இஷ்டத்துக்கு வாங்கிட்டு அப்புறம் பில் வந்த பிறகு முழிப்போம். டெபிட் கார்டுல அப்படி இல்லையே. நம்ம அக்கவுண்ட்டில காசு இருந்த தானே அதை உபயோகிக்கவே முடியும். அதனால டெபிட் கார்டு பிரச்னையே இல்லை" என்று சொல்லும் ஆசாமியா நீங்கள்?
creditcard.com இணையமும் யாஹூவும் இணைந்து வழங்கும் இந்த அட்வைஸ்களைப் பாருங்கள்...
"பாக்குறதுக்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ரெண்டுமே ஒண்ணாத் தான் இருக்கும். ஆனா ரெண்டு (பிளாஸ்டிக்கு அட்டையு)ம் ஒண்ணு இல்லைன்னு எல்லாரும் புரிஞ்சுக்கணும். ரெண்டு வகையான கார்டுகளிலும் எப்படி பரிவர்த்தனை செய்யப் படுகின்றன, எப்படி அவை பாதுக்கக்கப்படுகின்றன என்பதில் எல்லாம் நிறைய மாற்றங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்."

- John Breyault, director of the Fraud Center for the National Consumers League,
a Washington, D.C.-based advocacy group

பொதுவாகவே ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது டெபிட் கார்டை உபயோகிப்பதை தவிருங்கள் என்பது தான் பெரும்பாலானோர் கருத்து. ஏனெனில் அது நம்முடைய வங்கிக் கணக்குடன் நேரடித் தொடர்பில் இருக்கிறது. யாராவது அதிலிருந்து பணத்தை உருவினால் மொத்தமாக உருவி விடலாம்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு கீழ்கணட பத்து சந்தர்ப்பங்களில் டெபிட் கார்டை தவிருங்கள் என்று பட்டியலிட்டுள்ளார்கள். முயன்று பார்ப்போமா?


1. போன் ஆர்டர் மற்றும் ஆன்லைனில் டெபிட் கார்டை தவிர்க்கவும். (காரணம் மேலே சொல்லியாச்சு!)

2. கார், வீடு போன்ற பெரிய அளவிலான பொருட்களை வாங்கும் போது டெபிட் கார்டினை தவிர்க்கவும். சமயங்களில் கிரெடிட் கார்டுகளை இந்தச் சமயத்தில் உபயோகித்தால் இலவச இன்சூரன்ஸ் போன்ற சலுகைகள் கிடைக்கலாம்.

3. வாடகைக்கு கார் எடுக்கும் போதோ அல்லது அது போல டெபாஸிட் கேட்கும் போதோ கிரெடிட் கார்டை உபயோகிக்கவும். வீணாக நம்முடைய பணம் முடங்குவதை தவிர்க்கலாம். கடைசியாக பில் செட்டில் செய்யும் போது தேவைப்பட்டால் டெபிட் கார்டிலோ, காசாகவோ செலுத்திக் கொள்ளுங்களேன்.

4. ரெஸ்டாரெண்ட்டுக்கு போறீங்களா? தப்பித் தவறி கூட டெபிட் கார்டு கொடுத்திடாதீங்க. எந்தப் புத்தில எந்த பாம்பு இருக்குமோ? உங்க கண் பார்வையிலிருந்து விலகி உங்களுடைய கிரெடிட் / டெபிட் கார்டுகள் சென்று வரும் ஒரு சில இடங்களில் ரெஸ்டாரெண்டுகளும் ஒன்று.

5. ஆன்லைனா இருந்தாலும் சரி, நேரடியாக உபயோகிப்பதாக இருந்தாலும் சரி.. முதல் தடவையாக உபயோகிக்கும் இடங்களில் டெபிட் கார்டை தவிர்க்கவும். அங்களைப் பத்தி ஒண்ணுமே தெரியாதில்லையா?! பக்கத்து வீட்டுக்காரனுடைய பிரெண்டோட பிரெண்டு இங்கே வாங்கிருக்காராம் அப்படீன்னு எல்லாம் நினைத்து டெபிட் கார்டை எடுத்து நீட்ட வேண்டாம். ஏதாவது மன்னார் & கம்பெனியா இருந்தா பக்கத்து வீட்டுக்காரரோட பிரெண்டோட பிரெண்டா வந்து பதில் சொல்லப் போறாரு?!

6. காசை இப்போ கொடுங்க. பொருளை அப்புறமா வாங்கிக்குங்க என்பது மாதிரியான ஆபர்களின் போது டெபிட் கார்டு தவிர்த்தல் நலம்.

7. மாதத் தவணைகள், மாதா மாதம் கட்டணம் கட்டும் சேவைகள் போன்றவற்றில் டெபிட் கார்டை உபயோகிக்காதீர்கள். சமயங்களில் நாம் சேவையை ரத்து செய்த பிறகும் கூட அவர்கள் தொடர்ந்து நமது கார்டில் பணம் எடுத்துக் கொண்டிருக்க வாய்ப்புண்டு. கிரெடிட் கார்டாக இருந்தால் சண்டை போட்டு காசை திரும்ப வாங்குவது கிரெடிட் கார்டு கம்பெனியின் தலைவலி என்று இருந்து விடலாம். (கம்ப்ளைண்ட் கொடுத்துவிட்டு!). ஆனால் டெபிட் கார்டில் அப்படி இல்லை. அதுவுமில்லாமல், தப்பித் தவறி நமது அக்கவுண்டில் பணம் இல்லாத நேரமாகப் பார்த்து இந்த சந்தாத் தொகைக்கு பில் வந்தால் அதற்கான அபராதத் தொகை மேற்படி கம்பெனி மற்றும் நமது வங்கி இரண்டிலும் தண்டம் அழ வேண்டியிருக்கும்.

8. நாலைந்து மாதங்கள் கழித்து செல்லவிருக்கும் சுற்றுலாவுக்கான ஹோட்டல், டிக்கெட் புக் செய்யும் போது டெபிட் கார்டு வேண்டாமே. அட்வான்ஸ் தொகை என்று ஒரு தொகை உடனடியாக நமது அக்கவுண்ட்டிலிருந்து கழிப்பதோடு, நான்கு மாதங்களுக்கும் மேலாக நமது டெபிட் கார்டு எண் எல்லாம் அநாவசியமாக அவர்களிடத்தில் இருக்கும். எங்கேயும் எதுவும் நிகழலாம்.

9. பெட்ரோல் பங்க், ஹோட்டல்கள் போன்றவற்றிலும் டெபிட் கார்டை தவிர்க்கவும்.

10. ATM-மெஷின்களில் பணம் எடுக்கச் செல்லும் போது கூடுமான வரையில் உங்களுக்குப் பழக்கப்பட்ட மெஷின்களிலேயே பணம் எடுக்கவும். அப்படிச் செல்லும் போது அந்த மெஷினில் ஏதாவது சந்தேகப் படும்படியாக மாற்றங்கள் தெரிகிறதா என்றும் கவனிக்கவும். மெஷினிலேயே ஆட்டையைப் போட்டு நம்மை அம்பேல் ஆக்கும் டெக்னாலஜி திருடர்கள் உலவ ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதால் அதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

நன்றி : மாயவரத்தான்

Sunday, March 21, 2010

எதிர்த்தவர்களாக வளரும் இஸ்லாம்

சமீபத்தில் (விடியல் வெள்ளி என்று நினைக்கிறேன்) ஒரு இசுலாமிய இதழிழ் ஒரு கட்டுரை படிக்க நேரிட்டது.அதில் சுவிட்சர்லாந்து நாட்டில் 4 இலட்சம் மக்கள் இஸ்லாத்தை பின்பற்றினாலும்(ஆனால் உண்மையான எண்ணிக்கை 3 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது) அங்கு கட்டப்படும் பள்ளிகளுக்கு மினாரா கட்ட கூடாது என்று பிரசாரம் கிளம்பியுள்ளது என்றும்,மேலும்

சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் மினாராக்களை தடைச்செய்வது குறித்து விருப்ப வாக்கெடுப்பில் சுவிஸ் நாட்டவர்கள் மினாராக்களை தடைச் செய்ய ஆதரவாக வாக்களித்தனர் என்று குறிப்பிட்டு இருந்தது

இது சம்பந்தமாக நான் சமிபத்தில் திருவை பிளாக்கில் கண்ட ஒரு பதிவை இங்கு பகிர்ந்து கொள்ள மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.அது இறைவன் கிருபையால் "இந்த எதிர்ப்பு பிர‌சாரத்தில் முக்கியமாக செயல்பட்ட சுவிஸ் மக்கள் கட்சியின் முக்கிய உறுப்பினர் டானியல் ஸ்ட்ரீக் – Daniel Streiச்ஹ்‍ சமிபத்தில் இஸ்லாத்திற்கு மாறினார்.
அதை அவர் நேரடியாக தொலைக்காட்சியில் தோண்றி அதற்கான விளக்கத்தை அளித்தார்.இஸ்லாத்தை ஏற்றமைகான காரணத்தை இவர் இப்படி குறிபிடுகின்றார் “Islam offers me logical answers to important life questions, which, in the end, I never found in Christianity,”-
நான் கிறிஸ்தவத்தில் ஒரு போதும் காணாத வாழ்க்கை பற்றிய மிகவும் முக்கியமான வினாக்களுக்கு இறுதியாக இஸ்லாம் தர்க ரீதியான பதில்களை எனக்கு தந்துள்ளது என்று கூறியுள்ளார் -

இவரை பற்றி சுவிட்சர்லாந்து தொலை காட்சி இப்படி கூறியுள்ளது He was a true SVPer and Christian. He read the Bible and regularly went to church. Now Daniel Streich, military instructor and community council member, reads the Qur’an, prays five times a day and goes to a mosque! இவர் உண்மையான SVP உறுபினராகவும், வழமையாக கிறிஸ்தவ ஆலையத்துக்கு செல்பவராகவும் , பைபிளை படிபவராகவும் இருந்த Daniel Streich என்ற இராணுவ கற்கைக்கான விரிவுரையாளர் , சமூக கவுன்சில் உறுப்பினர் இப்போது மஸ்ஜிதுக்கு செல்கிறார் , ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் தொழுகிறார் , அல் குர்ஆன் படிக்கிறார் என்று குறிபிடுகிறது

இவர் சுவிட்சர்லாந்தில் மினாராக்கள் கட்டுவதை தடைச் செய்ய வேண்டுமென்றூம், மஸ்ஜிதுகளை பூட்டவேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தை வழி நடத்தியவர் இவரின் மாற்றம் முழு மேற்கு நாடுகளிலும் பெரும் அதிர்வு அலைகளை எழுப்பி வருகின்றது என்பதுடன் இவருடன் இணைந்து இஸ்லாத்துக்கும் , முஸ்லிம்களுக்கும் எதிரான பிரச்சாரம் செய்த கட்சியின் உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்திருபதாக தெரிவிக்க படுகின்றது


. தனது கடந்த கால நடவடிக்கைகளுக்காக வெட்கப்படுவதாகவும், ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த மஸ்ஜித் கட்டுவதற்கு தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவித்துள்ளார் .


இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்பத்தில் இஸ்லாத்தை கடுமையாக எதிதவர்களால் தான் இஸ்லாம் அதிகம் வளர்ந்துள்ளது என்பதும் இஸ்லாத்தின் எதிரியாக இருந்தவர்கள்தான் அதிகம் இஸ்லாத்தை வளர்க்கும் பணிக்கு தமை அற்பணித்தார்கள் என்பதும் இஸ்லாமிய வரலாறு.

Sunday, January 10, 2010

திருட்டு விசிடியும் ‍ தீவிரவாதமும் ‍ காமன்மேன் கமல் பேச்சு

திருட்டு விசிடியும்- தீவிரவாதமும் ‍- காமன்மேன் கமல் பேச்சு


ஒசியிலே பார்ப்பதற்கு ஆள் இல்லையென்றாலும்,ஷிட்டிங் முடிந்த சில தினங்களில் இணையத்தில் ஜக்குபாய் வெளிவந்து விட்டது.அதனால் 15 கோடி ருபாய் நட்டம் அதை தயாரித்த ராடன் நிறுவனத்துக்கு ஏற்ப்பட்டதுள்ளது.
இந்த பிரச்சனைக்காக அவசர கூட்டத்தில் பிரபலங்கள் தங்களது கருத்துகளை கூறினார்கள்.

அதே விழாவில் பேசிய கமல் என்னும் காமன்மேனின் பேச்சு அபாயத்தின் உச்சமாகவும், விஷத் தன்மையுடனும் இருந்தது. ‘‘குறைந்த விலையில் வி.சி.டி.யிலும், டி.வி.டி.யிலும் படம் பார்ப்பதை மக்கள் சந்தோஷமாக நினைக்கிறார்கள். அதை திருத்த முடியாது. ஹேராம் சி.டி. பர்மா பஜாரில் விற்கப்பட்டது எல்லோருக்கும் தெரியும். இதுபோன்ற சட்ட விரோதமான செயல்கள் எல்லாம் கறுப்பு பணத்தில் இருந்து வருவதுதான். திருட்டு வி.சி.டி. மூலம் கிடைக்கும் பணம் எல்லாம் மும்பை குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதை நாம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். திருட்டு வி.சி.டி. பணம் எல்லாம் தேசத் துரோகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும்’’ என்பது காமன்மேன் கமலின் பேச்சு.
மிக அபாயகரமான இந்தப் பேச்சின் பொருள் என்ன? திருட்டு வி.சி.டி. விற்கும் பணத்தில்தான் மும்பையில் குண்டு வைக்கிறார்கள் என்றால் கமல் யாரை சொல்கிறார்? இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. மிக நேரடியாக முஸ்லீம்களை குறிவைத்தே இந்தக் குற்றச்சாட்டை அவர் சொல்கிறார். ஏன், திருட்டு வி.சி.டி. விற்கும் பணத்தில் இருந்து கரசேவையும், மாலேகான் குண்டுவெடிப்பும் நடக்காதா? பர்மா பஜாரில் திருட்டு வி.சி.டி. விற்கும் அத்தனை பேரும் பாய்களா? அப்படியே விற்றாலும் அந்த பணம் தேச விரோத செயல்களுக்குதான் பயன்படுத்தப்படுகிறது என்ற முடிவுக்கு கமல் எப்படி வருகிறார்? அவை அடிமனதில் ஊறிக் கிடக்கும் இஸ்லாமிய காழ்ப்பில் இருந்து வரும் சொற்கள். கமலின் இந்தப் பேச்சை வைத்து அவர் மீது வழக்கு தொடுப்பதற்கான எல்லா நியாயங்களும் இருக்கின்றன. அப்புறம், திருட்டு வி.சி.டி. விற்கும் பணம் எல்லாம் தேசத் துரோகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது என்றால், சினிமாக்காரர்கள் சம்பாதிக்கும் பணம் எல்லாம் நாட்டை வளமாக்கப் பயன்படுகிறதா என்ன?

----

கும்பகோணம் தீ விபத்தின்போது பந்தாவாக ‘நான் 5 லட்சம் தாறேன், நான் 10 லட்சம் தாறேன்’ என்று அறிக்கைவிட்ட கொழுப்பெடுத்த கோடீஸ்வர நடிகர்களில் முக்கால்வாசிப் பேர் இதுவரைக்கும் ஒரு பைசாவும் தரவில்லை. இதைப்பற்றி பலமுறை பத்திரிகைகளில் செய்திகள் வந்தும் அந்த நேர்மையின்மைப்பற்றி பேசவே மறுக்கிறார்கள். இந்த யோக்கியவான்கள்தான் இப்போது திருட்டு வி.சி.டி. பற்றி அலறுகின்றனர். ‘சரத்குமாருக்கே இந்த கதியா, ஒரு பெரிய பட்ஜெட் படத்துக்கே இந்த நிலைமையா?’ என்று இழவு வீடு போல் நடிக்கின்றனர். சில நடிகர்கள் ஒரு படி மேலே போய் ‘தமிழனுக்கு சொரணை இல்லை. திருட்டு வி.சி.டி. பார்த்துக் கெட்டுப்போறான்’ என்று சாபம் விடுகிறார்கள். சினிமா என்பது ஒரு தொழில். அதில் ஏற்படும் பிரச்னைக்கும் தமிழனின் சொரணைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? ஒரு தொழிலில் சந்திக்கும் சிக்கலை சமூகப் பிரச்னையாக மாற்றுகின்றனர். ஜக்குபாய் இணையத்தில் ரிலீஸ் ஆனதாலும், அதன்பொருட்டு ராதிகாவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாலும் தமிழ் சமூகத்துக்கு என்ன குடிமுழுகிப் போய்விட்டது? லாபகரமாக தியேட்டருக்கு வந்து ஓடினால் மட்டும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு லாபத்தில் பங்கு தரப்போகிறாரா ராதிகா? உழைக்கும் மக்களின் பணத்தை கேளிக்கையின் பெயரால் கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கும் இவர்களின் அநியாயத் திருட்டைவிட வேறு பெரிய திருட்டு ஊரில் இல்லை.
ஒரு பொது மேடையில் ‘வாசபி’ என்ற பிரெஞ்சு படத்தை திருடிதான் ஜக்குபாய் எடுக்கப்படுகிறது என்று ரஜினிகாந்த் ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்திருக்கிறார். இதைப்பற்றி எந்தக் கருத்தும் சொல்லாத நடிகர்கள், வி.சி.டி. திருட்டுப் பற்றி மட்டும் வாய் கிழியப் பேசுகின்றனர். பொதுவாக திருடர்கள், தாங்கள் திருடியப் பொருளை இழந்துவிட்டால் அதைப்பற்றி வெளியே சொல்வதற்கு தயங்குவது பொது எதார்த்தம். திருடனுக்குத் தேள் கொட்டியைதைப்போல என நாம் பழமொழியே வைத்திருக்கிறோம். ஆனால் வாசபியைத் திருடி ஒரு தமிழ் படத்தை எடுத்துவிட்டு, அதை ஒருத்தன் திருடிவிட்டான் என்றவுடன் எகிறிக் குதிக்கிறார்கள். மோசடியும், ஆபாசமும் நிறைந்த இந்த வர்த்தக விபச்சாரத்தைப்பற்றி எந்த நடிகரும் வாய் திறக்கவில்லை. உடலின் அனைத்து துவாரங்களையும் மூடிக் கொண்டிருக்கின்றனர். இப்போது மட்டும்தான் என்றில்லை. ஒரு சில தனிப்பட்ட காழ்ப்புகள் உச்சத்திற்கு வரும் சந்தர்ப்பங்கள் நீங்களாக எப்போதுமே தமிழ் சினிமா வென்றுகள், தங்களின் தவறுகளை ஒத்துக்கொண்டதோ, மன்னிப்புக்கேட்டதோ, அதைப்பற்றி விவாதம் செய்ததோ கிடையாது.
அண்மையில் தென்னாப்பிரிக்க படமான Tsotsi யை அப்படியே உருவி ‘யோகி’யாக்கி அமீர் எடுத்தப் படம் பற்றி கோடம்பாக்கத்தின் நேர்மையாளர்கள் என்ன கருத்தை சொன்னார்கள்? ஒரு விபத்து, அதில் சந்திக்கும் மூவரின் கதைகள் தனித்தனி கோணங்களில் விவரிக்கப்படும் அம்ரோஸ் ஃபெரோஸ் என்ற படத்தை சுட்டு மணிரத்னம் ஆயுத எழுத்து எடுத்தார். ‘sliding doors’ -ன் தாக்கத்தில் ஜீவா ‘12பி’ எடுத்தார். shoot em up-ல் ஐந்து விரல்களுக்கு இடையே ஐந்து தோட்டாக்களை வைத்து கையைத் தீயில் காட்ட, துப்பாக்கி இல்லாமலேயே தோட்டாக்கள் சீறிப்பாய்ந்து எதிரில் நிற்பவனைத் தாக்கும் காட்சியை அச்சு பிசகாமல் அப்படியே சுட்டு நியூட்டனின் மூன்றாம் விதியில் வைத்தார் எஸ்.ஜே.சூர்யா. இப்படியான கலைத் திருட்டுக்காக எக்காலத்திலும் குற்றவுணர்வு அடைபவர்கள் இல்லை இவர்கள்.
ஆனால் இவர்களின் நலன்களுக்காகவே இயங்கும் இந்த அரசு சினிமாக் காரர்களின் பிரச்னை என்றால் மட்டும் ஓடோடி வந்து தீர்த்து வைக்கிறது. சினிமா கலைஞர்கள் குடியிருக்க வீடு இல்லாமல் அல்லாடுவதால் மாமல்லபுரம் சாலையில் 95 ஏக்கர் நிலத்தை அவர்களுக்காக ஒதுக்கித் தந்திருக்கிறார் கருணாநிதி. அண்மையில் கூட கமல்ஹாசன் கலந்துகொண்ட சினிமா வர்த்தக கருத்தரங்குக்கு தமிழக அரசு சார்பாக 50 லட்ச ரூபாய் கொடுத்தார். பாவம், சினிமாக்காரர்கள் கஞ்சிக்கு இல்லாமல் பஞ்சத்தில் தவிக்கிறார்கள். இவர் போய் உதவியிருக்கிறார். என்ன அநியாயம் இது? சினிமா என்பது ஒரு தொழில். அதன் முன்னேற்றத்துக்காக கேட்டுக் கேள்வியில்லாமல் மக்கள் பணம் செலவிடப்படுவது எத்தனைப் பெரிய அநியாயம்? இன்று, ஆட்டோ ஓட்டுனர்கள், சலவைத் தொழிலாளர்கள், பனைத் தொழிலாளர்கள், முடி திருத்துபவர்கள், வழக்கறிஞர்கள் என சமூகத்தின் உழைக்கும் சக்தியாக இருக்கும் எத்தனையோ வகையினர் முதல்வர் கருணாநிதியை சந்திக்க காத்திருக்கின்றனர். அதற்கான நியாயமான காரணங்களும் அவர்களுக்கு இருக்கின்றன. ஆனால் கருணாநிதியோ நடிகை சோனா, குஷ்பு போன்றவர்களை சந்திக்கவே முன்னுரிமை தருகிறார். அந்த அடிப்படையிலேயே ஜக்குபாய் படத்தை இணையத்தில் ரிலீஸ் செய்த குற்றவாளிகளை மின்னல் வேகத்தில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்திருக்கிறார் கருணாநிதி. இவ்வளவு வேகமான நடவடிக்கை வேறு எந்த மக்கள் பிரச்னைகளுக்கும் எடுக்கப்பட்டிருக்கிறதா என்று நினைத்துப் பாருங்கள். ஒரு வருமானச் சான்றிதழ் வாங்கவே வாரக்கணக்கில் அலைய வேண்டியிருக்கிற நாட்டில் ராதிகாக்களின், சரத்குமார்களின் பிரச்னைகளுக்கு மட்டும் உடனடி தீர்வை அளிப்பதில் இந்த அரசு கூடுதல் கரிசனம் கொண்டிருக்கிறது.


நன்றி புதிய கலாச்சாரம்