சகோதரர் ரொஷன் அவர்கள் கூகுள் குழுமத்திலிருந்து அனுப்பி இருந்த மெயில் நமக்கு ஒரு படிப்பினை தருவதாக இருக்கிறது.அதனால் பகிர்ந்து கொள்ள விரும்பி இங்கு தருகிறேன்
சில விஷயங்கள் உங்களைப் பாதிப்பதாகவும் கவலையளிப்பதாகவும் உள்ளதா??
படித்துப் படித்து நீங்கள் சலிப்படைந்து விடுகிறீர்களா?
இவர்களுக்கு படிப்பது சலிப்பைத் தரவில்லை!
உங்களுக்கு பச்சைக் கீரைகளும் காய்கறிகளும் பிடிப்பதில்லை...?
இவர்களுக்கோ வேறு வழியில்லை
நீங்கள் எப்போதும் உணவுக் கட்டுப்பாட்டை கையாள்கிறீர்கள்...? !
அவர்கள் உண்ண விரும்புகிறார்கள்....
உங்கள் பெற்றோரின் மிகக் கூடுதலான கவனிப்பு உங்களை வருத்துகிறது.....?
அவர்களுக்கோ... பெற்றோர்களே இல்லை!
ஒரே மாதிரியான விளையாட்டு உங்களுக்குப் போரடிக்கிறது....?
அவர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை!!!
வீட்டில் 'அடிடாஸ்' வாங்கி தருகிறார்கள்... உங்களுக்கு 'நைக்'தான் பிடிக்கிறது...?
அவர்களுடைய 'பிராண்டு' இது மட்டும்தான்...!!!
உங்களைப் படுக்கைக்கு போகச் சொல்லி தொல்லை படுத்துகிறார்களா...?
அவர்கள் எழும்பவே விரும்பவில்லை
குறை சொல்வதை தவிருங்கள்.....
மிகுந்த பணிவோடு சொல்லுங்கள்
என் இறைவனே ! என்னில் இத்துனை கருனை பொழிந்தற்காகவும், என் உடல் நலம்,என் குடும்பம், என் குழந்தைகள்,என் வேலை,என் நண்பர்கள் மற்றும் அனைத்து அருள் வளங்களுக்காகவும் உனக்கு நான் நன்றி செலுத்துகிறென்
உன்னை மறந்தவர்களும்,உன்னை அறியாதவர்களும் உன்னையும், நீ செய்துள்ள அளப்பறிய கருனஈயும், உன் அன்பையும் அறிவுறுத்த எனக்கும்
ஒரு வாய்ப்பைக் கொடு.
குறைவாகக் கேட்பதையும் கூடுதலாக நன்றி செலுத்துவதையும் எப்போதும் உங்கள் நினைவிலிருத்துங்கள்
நன்றி ரோஷன் மற்றும் சுல்தான்குலம்
//என் இறைவனே ! என்னில் இத்துனை கருனை பொழிந்தற்காகவும், என் உடல் நலம்,என் குடும்பம், என் குழந்தைகள்,என் வேலை,என் நண்பர்கள் மற்றும் அனைத்து அருள் வளங்களுக்காகவும் உனக்கு நான் நன்றி செலுத்துகிறென்//
ReplyDeleteவணக்கம் நண்பா... இந்த இடத்தில்தான் நான் மாறுபடுகிறேன்... நமக்கு இத்தனை சுகத்தை கொடுத்த ( இறைவன் என்றே வைத்து கொண்டதாலும்) இறைவன்.. அந்த அப்பாவி மக்களை சிதைத்த காரணம் என்ன..
இப்படிப்பட்ட விசயங்களை பார்க்கிறபோதுதான்.. கடவுள் கோட்பாடுகளை நான் மறு பரிச்சீலனை செய்கிறேன்...
சகோதரர் செந்தில் அவர்களுக்கு
ReplyDeleteதங்கள் வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது.
நான் சார்ந்து இருக்கும் மதத்தை வைத்து சொல்லவில்லை. இறைவன் மனிதர்களை பல்வேறு சோதனைக்களுக்கு ஆட்படுத்துகிறான்.சிலருக்கு வறுமை கொடுத்து,சிலருக்கு செல்வத்தை கொடுத்து,சிலருக்கு கல்வியை கொடுத்து.அத்தகைய செயல்பாடுகளில் அவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதை தான் இறைவன் பார்க்கிறான்.
கே.ஆர்.பி.செந்தில் அண்ணன் கருத்து என் கருத்தும்
ReplyDeleteபமுக தலிவரும் செந்தில் அண்ணாவின் கருத்தை வழிமொழிகிறாரா....
ReplyDeleteஇறைவன் சோதனைகளை கொடுத்து டெஸ்ட் செய்கிறான்....
ReplyDeleteஇறைவனே இல்லை... அப்படி இருந்தால்.....ஏன் இப்படி துன்பங்கள் கொடுக்கிறான்?
============================================================================
மேலே உள்ள இரண்டு கருத்துக்களோடும் என்னால் ஒத்துப் போக முடிவதில்லை....இதை ஏன் இரு நிகழ்வாக நாம் பார்ப்பதில்லை....இதற்கு கடவுளை தொடர்பு படுத்த வேண்டிய அவசியம் என்ன?
வெயிலும் பனியும் இரு நிகழ்வுகள்... சந்தோசமும் துக்கமும் நிகழ்வுகள்....ஏன் நிகழ்கின்றன என்பதற்கு ஓராயிரம் காரணங்கள் இருக்கின்றன...புறத்தில்.... இந்த நிகழ்வுகளுடன் நேரிடையாகவும் மறைமுகமாகவும் நமக்கு பங்கு இருக்கிறது.....
உலக அழகியைப் பார்த்து சந்தோசப்படுகிறோம்....அசிங்கமான ஒரு பெண் பார்த்து அதிருப்தி கொள்கிறோம்...இந்த இரண்டு நிகழ்வுகளுமே மனதில்தான் ஏற்படுகிறது....
வாழ்வு ஓட்டத்தின் பகுதி....சரியாக்கவேண்டியது மனிதர்களாகிய நாம்...இருப்பது எதுவோ அது உண்மை என்றால்....இதோ நாம் இருக்கிறோமே.....!
நெருங்கி வந்து விட்டிர்கள் தேவா...... உங்களிடமும் செல்வமும்,கல்வியும் கொடுக்கப்பட்டு இருந்தால் அது பிறரின் பயன்பட்டிற்குதான்.அது போல் வறுமையில் ஒருவன் எப்படி நெறி தவழாது இருக்கிறான் என்பது இறைவனின் கணக்கு.
ReplyDelete"இந்த நிகழ்வுகளுடன் நேரிடையாகவும் மறைமுகமாகவும் நமக்கு பங்கு இருக்கிறது.....
"
இத்தகைய கொடுமைகளுக்கு தனி மனிதன் முதல் அரசாங்கத்திற்கு பொறுப்பு இருக்கிறது
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
நண்பா உண்மையாக சொல்கிறேன் இதை படிக்கும் போது என் கண்கள் கலங்கின. யாரை குற்றம் சொல்லி என்ன ஆக போகுது. இருப்பவன் இன்னும் நிறைய சேர்க்கிறான் , இல்லாதவனோ இன்னும் இல்லாமலே போகின்றான்.
ReplyDeleteநிச்சயம் மனம் கலங்க செய்யும் சசி.அதனால் மெயிலில் வந்ததை இங்கு பதிந்தேன்.வருகைக்கு நன்றி
ReplyDeleteஆகச்சிறந்த பதிவு.. வார்த்தைகள் வரவில்லை..
ReplyDeleteவாங்க அகமது பாய்.வருகைக்கு நன்றி
ReplyDelete