உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக....

Sunday, July 18, 2010

மனிதனின் திறனுக்கு எது எல்லை?மன்னை’ மாதவன்


இயந்திரங்கள் இயங்கும் திறனை (HORSE POWER) குதிரைதிறன் என்று கணக்கிடப் படுகிறது. அந்த இயந்திரத்தை வடிவமைத்து இயக்கும் மனிதனின் திறனை எப்படி கணக் கிடுவது? மனிதனின் திறனுக்கு எது எல்லை? அளவிட முடியாத மனிதனின் திறனுக்கு வானமே எல்லை. எத்தனையோ திறன்கள் மனி தனுக்குள் புதைந்திருந்தாலும் தலை முறைகளைக் கடந்து மனிதனை அடையாளம் காட்டும் மிக முக்கியத் திறன் அவனது கற்பனைத் திறன். ஆங்கிலத்தில் கிரியேட்டிவிட்டி (Creativity) என்றும் மற்றும் படைப்பாற்றல் என்றும் பல பெயர்கள் இதற்கு உண்டு. படைப் பாற்றல் என்பது திரைப்படப் பாடல் ஆசிரியர்கள், இயக்குனர்கள் சார்ந்தது என்ற கருத்து பரவ லாக நிலவிவருகிறது.
எந்தவிதப் பாகு பாடும் இன்றி எல்லா மனிதனுக்குள்ளும் இருக்கும் இந்தப் படைப்பாற்றல் கற்பனைத்திறன். உலகின் மிக அழகான கடற்கரைகளில் மியாமி கடற்கரையும் ஒன்று. வாரத்தின் இறுதி நாட்களில் சனி, ஞாயிறு கிழமைகளில் விடுமுறையை உல்லாச மாகக் கழிக்க லட்ச கணக்கானவர்கள் அங்கு கூடுவது வழக்கம். அப் பொழுது அவர்கள் விரும்பி சாப்பிடுவது ஐஸ்கிரீம்.


தங்கள் விடுமுறையை உல்லாசமாக கழித்துவிட்டு எல்லோரும் சென்றுவிடுவர். மியாமி கடற்கரையில் குவிந்து கிடக்கும் லட்சக்கணக்கான ஐஸ்கிரீம் கப்புகளைச் சுத்தம் செய்வது அங்கிருந்த துப்புரவுத் தொழிலாளர் களுக்குப் பெரிதும் சிரமத்தை ஏற்படுத்தியது. இதனால் பல தொழிலாளர்கள் திங்கட்கிழமை களில் விடுப்பு எடுத்து வந்தனர். இந்தப் பிரச் சனை மியாமி நகராட்சிக்கு பெரும் சவாலாக விளங்கியது. இதற்கு முடிவுகாண மியாமி நகராட்சி அனைத்து துப்புரவுத் தொழிலாளர் களை ஒன்று திரட்டி யோசனைக் கேட்டது. எல்லா தொழிலாளர்களின் எல்லா யோசனை களும் பதிவு செய்யப்பட்டது.ஒரு தொழிலாளர் மிக கோபமாகக் கூறினார், “ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு யார் கப்பை கீழே போட்டாலும் அந்த கப்புகளை அவர்கள் வாய்க்குள்ளேயே திணிக்க வேண்டும்”. இந்த யோசனையும் பதிவு செய்யப்பட்டது. ஐஸ்கிரீம் கப்புகளை கீழே போட்டால் அது பிரச்சனை. ஐஸ்கிரீமை கப்புகளோடு சேர்த்து சாப்பிட்டால்! பிரச்சனைக்கான மாற்று வழி கண்டுபிடிக்கப்பட்டது. அதுதான் இன்று நாம் காணும் வேப்பர் கப்ஸ் (Wafer Cups) சிந்தனை. மாற்றுச் சிந்தனையோடு மிக நெருங்கிய தொடர் புடையது. கற்பனைத் திறன்.வாழ்க்கையில் நாம் எடுக்கும் முடிவுகளில் கூட இந்த படைப்பாற்றல் மிகவும் உறுதுணை யாக இருக்கும்.அரசவையில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு மிக எளிதாகவும் கற்பனைத் திறனோடு கூடிய பல முடிவுகளைத் திறம்படக் கூறியவர் தெனாலி ராமன். தெனாலிராமன் கதைகளில் மாற்றுச் சிந்தனையோடு கூடிய கற்பனைத்திறனை நாம் நிறையக் காணலாம். அன்று அரசவை இன்று தொழிற்சாலை. நாம் உண்ணும் உணவில் காய்கறிகள் பெரும்பாலும் கூட்டா கவும், பொறியலாகவும் நமக்கு பரிமாறப்பட்டது. அதே காய்கறிகள் இன்று ருசியிலும் பெயரிலும் மாற்றம் அடைந்து ரெசிபிகள் என்று பலவிதங் களில் பரிமாறப்படுகிறது. இதன் செய்முறையைப் பல தொலைக்காட்சிள் கூட ஒளிபரப்புகிறது. இது சமையலில் மனித இனம் கண்ட‘கிரியேட்டிவிட்டி’.பொறியியல் கல்விகளுக்கு நடுவே மாணவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கும் ஃபேஷன் டெக்னாலஜி (Fashion Technology), இண்டீரியர் டெக்ரேஷன் (interior Decoration) போன்ற கல்வி முறைகள் வளர்ச்சி அடைந்திருக் கிறது. இந்த படைப்பாற்றலின் மாற்றத்தை நம்மால் நன்கு உணரமுடிகிறது. பொறியியல் பட்டதாரியாக இருந்த ரங்கராஜனை எழுத் தாளர் “சுஜாதாவாக” புகழ்பெற வைத்தது இந்த கற்பனை திறனே. நமது தேசிய கொடியின் வர்ணங்கள் மூன்று. பச்சை நிறம் பசுமையான இந்தியாவை குறிக்கும். வெண்மை நிறம் சமா தானத்தையும், அமைதியையும் குறிக்கும். இளஞ்சிவப்பு நிறம் அர்பணிப்பைக் குறிக்கும்.நம் எண்ணங்களை வண்ணங்கள் மூல மாகவும், நமது மாநிலங்களின் எண்ணிக்கையை மத்தியில் ஒரு வட்டத்திற்குள் சிறுகோடு களாகவும் வெளிப்படுத்துகிறது தேசிய கொடி. நமது தேசிய கொடியின் இந்த வெளிப்பாட்டை (கற்பனைத் திறனை) அதன் அர்தத்தை பல வெளிநாட்டவர்கள் வியந்து பாராட்டி உள்ளனர்.மனிதன் கண்டுபிடித்த எண்களை கடிகாரமாக ஒரு வட்டத்துக்குள் அடக்கி, நொடி, மணி, நிமிடம் என்று பகுத்துப் பெயரிட்டு அதன் மூலம் தன்னையே ஆண்டு கொள்ளும் மனித இனத்தின் இந்தப் படைப்பாற்றலை யாரலும் மெச்சாமல் இருக்க முடியாது. கடிகாரத்தில் நொடி முள் ஒன்று உண்டு. பெரும்பாலும் யாரும் அதை கவனிப்பதே இல்லை. நொடிமுள் போல்தான் நமக்குள் இருந்து கற்பனைத் திறனும் படைப்பாற்றலும் நம்மை இயக்க காத்துக் கொண்டு இருக்கிறது.சில வழிகளின் மூலமாக நமக்குள் இருக்கும் இந்தப் படைப்பாற்றலை நாம் வெளிப்படுத்தலாம். தொழிற்சாலைகளிலோ, வீடு களிலோ பிரச்சனைகளுக்குத் தீர்வு காண பல கோணங்களில் பல நிலைகளில் நம் யோசனையை மாற்றி யோசிக்கலாம். (உதாரண மாக மியாமி கடற்கரை சம்பவம் போல)தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிடையே 20 முதல் 30 நொடிகளில் தங்கள் கற்பனைத் திறனை அருமையாக வெளிப்படுத்தும் விளம்பர படங்களைக் கூர்ந்து நோக்கினால் அதன் மூலம் நம் கற்பனைத் திறன் பெரிதும் வளரும், வெளிப்படும்.சொந்தப் பிரச்சனைகளைத் தள்ளி வைத்து விட்டு மனதைச் சற்று அமைப்படுத்திக்கொண்டு கைகடிகாரத்திலோ அல்லது சுவர் கடிகாரத்திலோ நகரும் அந்த மூன்றாவது நொடி முள் நகர்வதை உன்னிப்பாகக் கவனித்தால் நமக்குள் இருக்கும் படைப்பாற்றல் உயிர்பெறும். திரைப்பட இயக்குனர்கள் தங்கள் கற்பனைத் திறனை திரையில் வெளிப்படுத்துகிறார்கள். இந்தத் திறனை வெற்றி அடையச் செய்வது நாம் தான். சக மனிதனின் கற்பனைத் திறனை நாம்வெற்றி பெறச் செய்கிறோம். நமக்குள் இருக்கும் கற்பனைத் திறனை நம்வாழ்வில் வெளிப்படுத்தி வெற்றிபெற முடியாதா? நம்மால் வளம் பெறமுடியாதா? வாருங்கள் வளம் பெறுவோம்.

Thanks Thannambikkai

4 comments:

 1. மிக அருமையான பதிவு...அழகாய் எழுதுகிறீர்கள்.


  "சொந்தப் பிரச்சனைகளைத் தள்ளி வைத்து விட்டு மனதைச் சற்று அமைப்படுத்திக்கொண்டு கைகடிகாரத்திலோ அல்லது சுவர் கடிகாரத்திலோ நகரும் அந்த மூன்றாவது நொடி முள் நகர்வதை உன்னிப்பாகக் கவனித்தால் நமக்குள் இருக்கும் படைப்பாற்றல் உயிர்பெறும்."

  சூப்பர் டிப்ஸ்..பொல்லோ பண்ணி பாக்கறேன்..

  ReplyDelete
 2. மிக அருமையான பதிவு...அழகாய் எழுதுகிறீர்கள்.


  "சொந்தப் பிரச்சனைகளைத் தள்ளி வைத்து விட்டு மனதைச் சற்று அமைப்படுத்திக்கொண்டு கைகடிகாரத்திலோ அல்லது சுவர் கடிகாரத்திலோ நகரும் அந்த மூன்றாவது நொடி முள் நகர்வதை உன்னிப்பாகக் கவனித்தால் நமக்குள் இருக்கும் படைப்பாற்றல் உயிர்பெறும்."

  சூப்பர் டிப்ஸ்..பொல்லோ பண்ணி பாக்கறேன்..

  ReplyDelete
 3. இது என்னுடைய சொந்த பதிவு இல்லை.இது தன்னம்பிக்கை மாத இதழிழ் இருந்து எடுக்கப்பட்டது.நன்றி காயத்ரி.தங்கள் வருகைக்கு நன்றி காயத்ரி

  ReplyDelete
 4. மிகவும் விரிவாக அலசி இருக்கிறீர்கள்.. ஐஸ்க்ரீம் பற்றி நிறைய கதைகள் இருந்தாலும் நீங்கள் சொல்லும் தகவல் உண்மையாக இருக்கிறது..

  ReplyDelete