உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக....

Wednesday, July 14, 2010

இனிப்பான செய்தி

இனிப்பான செய்தி

டயபடீஸ் நோய்க்கு அடிக்கடி இன்சுலின் ஊசி போட்டு துன்பப்படுபவரா நீங்க?


விரைவில் உங்களுக்கென அற்புத மாத்திரை வருகிறது. 6 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும், ஆண்டுக்கணக்கில் டயபடீசை மறக்கலாம்.


இதுபற்றி டெல்லியைச் சேர்ந்த போர்ட்டிஸ் மருத்துவமனையின் டயபடீஸ் பிரிவின் தலைவர் அனுப் மிஸ்ரா கூறுகையில், ‘‘உடலின் சில எதிர்ப்பு சக்தி கோளாறால் டைப் 1 டயபடீஸ் ஏற்படுகிறது. அதைத் தடுக்கும் மருந்து கண்டுபிடிக்க கடந்த சில ஆண்டுகளாக தீவிர ஆராய்ச்சி நடந்தது. ஒடெலிக்ஸ்ஜமாப் என்ற மருந்து தயாரிப்பின் இறுதிக் கட்டத்தை ஆராய்ச்சியாளர்கள் எட்டியுள்ளனர்’’ என்றார். இந்த மாத்திரையை தொடர்ந்து 6 நாட்கள் சாப்பிட வேண்டும்.


அதன் பிறகு ஆண்டுக்கணக்கில் நோயாளியின் உடலில் தேவையான இன்சுலின் சுரப்பு ஏற்படும். அதனால், டைப் 1 டயபடீஸ் தடுக்கப்படும். அடிக்கடி இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் தேவை ஏற்படாது. இரைப்பைக்கு அருகே உள்ள ஜீரண சுரப்பியில் இருந்துதான் இன்சுலின் சுரக்கிறது. அது குறையும்போது டயபடீஸ் ஏற்படுகிறது. டைப் 1 டயபடீஸ் இப்போது இளைஞர்களை அதிகளவில் பாதித்து வருகிறது. ஓடெலிக்ஸ்ஜமாப் மாத்திரை, ஜீரணச் சுரப்பியை பாதிக்காமல் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். இதனால், வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியுடன் காலம் தள்ள வேண்டிய நிலையைத் தவிர்க்கலாம்
 
Dr.(Prof) Anoop Misra

5 comments:

  1. அப்படியா!!!! இதை கண்டுபிடித்தவர்களுக்கு புண்ணியமா போகும்.

    ReplyDelete
  2. உண்மைதான் புண்ணியமாக போகும்.நன்றி சசி

    ReplyDelete
  3. விரயைவில் சந்தைக்கு வந்தால் பலகோடிபேர் பயன் பெருவார்கள்.

    பதிவிற்க்கு நன்றி மதுக்கூராரே.

    ReplyDelete
  4. உண்மைதான் நண்பரே.தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  5. இனிய செய்தி நன்றி தம்பி

    ReplyDelete